- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
சூர்யா ஓர் அழகுக் கலை நிபுணர். திருமணம் மற்றும் நாட்டிய நிகழ்வுகளுக்கு அழகுக் கலை செய்து விடுவது வழக்கம். ஒரு பரதநாட்டிய நிகழ்விற்காக திருச்சிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தானே அவசரமாகக் கிளம்பி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். திருச்சிக்கு செல்ல வரிசையாகப் பேருந்துகள் நின்றன. கொஞ்ச நேரம் காத்திருந்து வெற்றிப் பயண பஸ் வந்ததும் ஏறினார். சூர்யாவிற்கு முன்பே எல்லா இருக்கையிலும் பெண்கள் உட்கார்ந்து விட்டனர்.
சூர்யாவிற்கு உட்கார இடம் இல்லாமல் போனது. சூர்யாவிற்குப் பின்பாக ஏறிய ஒரு வயது முதிர்ந்த பெரியவர் ஏறினார். அந்த முதியவருக்கும் உட்கார இடம் இல்லாமல் போனது. முதியவர் நிற்க முடியாமல் நின்று கொண்டு வந்தார். ஒரு பெண் கூட அவருக்கு உட்கார இடம் கொடுக்கவில்லை.
கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நான் நின்று கொண்டு பயணம் செய்கிறேன். இலவசப் பயணம் செய்பவர்கள் இருக்கையில் உட்கார்ந்து இருக்கிறார்களே இது என்ன நிலைமை என்று புலம்பினார். சூர்யாவும் மற்றும் சிலரும் ஆமாம் ஆமாம் என்று உதவிக் கரம் நீட்டினர்.

நடத்துநர் வந்து பயணச் சீட்டு வழங்கும் போது ஆண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பயணச் சீட்டு வழங்கினார்.
சூர்யா இலவசப் பயணச் சீட்டைப் பெற்றாயிற்று. மேலூர் செல்லும் போது கிடைத்த ஒரு இருக்கையில் சூர்யா விரைந்து சென்று உட்கார்ந்தாயிற்று. இப்போதும் வயது முதிர்ந்த பெரியவர் நின்று கொண்டு வந்தார்.
திருச்சிக்கு சென்று தன் அழகுக்கலையை முடித்து விட்டு மதுரைக்குத் திரும்ப இரவு நேரம் ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாகத் தன் அலங்காரத்தை சூர்யா கலைத்தாயிற்று.
அப்பாடியோ இந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு இந்தப் பெண்கள் எப்படித்தான் முழு நேரமும் இருக்கிறார்களோ என்று புலம்பிய படியே வெற்றி இலவசப் பயணத்திற்காகப் போட்ட தன் பெண் அலங்காரத்தைக் கலைத்தார் சூர்யா என்னும் சூர்ய பிரகாஷ்!
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
சூர்யா.. ஒரு நிமிடக் கதை (66)
ஏதோ ஒன்று!
அனு தினமும்!
தென்தமிழ் தலையங்கம்: சட்டப் புத்தகத்தைத் தாண்டி... அரசமைப்பு உணர்த்தும் வாழ்வியல்!
மொழி நமக்கு என்ன செய்யும்?
'கூடி முயங்கப் பெறின்'.. நல்லறமாகும்!
என் நெஞ்சுக்குள் ஏன் இன்னும் ஈரம் காயவில்லை?
சமையல் With ஸ்வர்ணா.. கோதுமை தோசை & கொங்குநாட்டு நெல்லி தக்காளி தொக்கு!
புதன் சிந்தனை... எதிர்ப்பார்ப்பின்றி மலர்கின்ற உறவே அழகான புரிதலின் உச்சம்
{{comments.comment}}