அனு தினமும்!

Nov 26, 2026,10:59 AM IST

- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்


சாலைகளின்

பயணம்

கடந்து போவது

இல்லை...


கடந்த

தருணங்களை

மீட்டெடுக்கிறது


ஒவ்வொருமுறை

கடந்து செல்லும்போதும்..


நிகழ்வு கால

சுழற்சியில்...

பிரித்துத் தருகிறது

கடந்தகால

நினைவுகளை





கச்சிதமாய்

கண்முன்

சில நொடிகளில்...


அதில்

மொளனமோ

வெட்கமோ

புன்னகையோ

இதழ் சுழிப்போ

அமைதியோ

கண்ணீரோ...


(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர், பாடகி என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்