இறைவன் புகழே இருள் நீக்கும் ஒளி.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (5)

Nov 26, 2026,12:01 PM IST

- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்


திருக்குறள்


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


பொருள்


இறைவனின் உண்மையான புகழைப் போற்றிப் வாழ்பவர்களை, அறியாமையுடன் தொடர்புடைய நல்வினை, தீவினை என்னும் இருவகை வினைகளும் பற்றாது என்பது இக்குறளின் பொருள்.


பழமொழி சிந்தனை!




“வினை விதைத்தவன் வினை அறுப்பான்!”


நல்ல எண்ணங்களை விதைப்போம்;

நல்ல செயல்களைச் செய்வோம்;

இறைவனின் உண்மையான புகழை உணர்ந்து வாழ்வோம்!


நல்வழியில் நடக்கும் மனதிற்கு

நன்மையே துணையாகும்!


வாழ்க்கைப் பாடம்


நம் செயல்களின் விளைவுகளை உணர்ந்து வாழ வேண்டும். இறைவனைப் போற்றுவதுடன் நல்ல எண்ணங்களையும் செயல்களையும் வளர்த்துக்கொள்வதே சிறந்த வாழ்க்கைக்கு வழி.


அறியாமை இருளை நீக்கி, நல்வழி ஒளியில் பயணிப்போம்!


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்