அடுத்த தலைமுறைக்காக!

Nov 26, 2026,04:09 PM IST

- "மலைமலர்" கி மேனகா மோகன்தாஸ்


பனிமலை

உருகாமல்.....


நதிநீர்

மாசாகமல்....


காற்றில்

கரியமிலம்

கலக்காமல்.....


பசுமை மாறாமல்...


இன்னும்

இயற்கை

வாழ்ந்து கொண்டிருக்கிறது....




நகரத்து வீட்டின்

நாற்சட்டத்து

ஓவியமாக.


அடுத்த தலைமுறைக்காக!


(கி.மேனகா B.A, B.Ed, M.A. கணவர் மோகன்தாஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏற்காடு மலை நகரில் வசித்து வருகிறார். தமிழ் ஆசிரியர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உடையவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்