"ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு".. சிந்திக்க ஒரு கதை (1)

Nov 26, 2026,03:19 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கல்யாணத்திற்கு வரன் தேடுவது, ஜாதகம் பார்ப்பது, நிச்சயதார்த்தம், பத்திரிக்கை அடிப்பது, பொருட்கள் வாங்குவது, புடவை,நகைகள் வாங்குவது, அழைப்பிதழ் கொடுப்பது என பல விஷயங்களுக்காக மணமகன் வீட்டார் & மணமகள் வீட்டார் பலமுறை சென்றுவர வேண்டி இருந்தது. இதுவே 'ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் பண்ணு' என்னும் தமிழ் பழமொழி வடிவமாகும்.


இந்த பழமொழி தான் காலப்போக்கில் மறுவி "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு " என்று மாறியுள்ளது.


சிந்திக்க ஒரு கதை -1


இந்தக் கதையில் வரும் கதாநாயகன் மனோஜ் வாழ்விலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது.




மூன்று நட்சத்திர ஹோட்டலில் மனோஜ் தினமும் ஹோட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு சல்யூட் அடித்து கதவை திறந்து வைக்கும் செக்யூரிட்டி வேலை பார்ப்பவன். அவன் திருமணப் பொருத்தம் பார்க்கும் தரகரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து வரன் தேடச் சொன்னான். நன்கு படித்த அழகான குடும்பப் பெண் வேண்டும் என்று கூறினான்.அதற்கு ஏற்றார் போல் தரகரும் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணின் ஜாதகத்தை மனோஜிடம் காண்பித்தான்.


தரகரே ஜாதகம் பார்த்து உங்கள் இருவருக்கும் நல்ல ஜாதக பொருத்தம் அமைந்துள்ளது. நான் இந்த  வரனையே  பேசி முடித்து விடுகிறேன் என்று மனோஜிடம்  ரூபாய்.1000 வாங்கிக் கொண்டான். ஆனால் மனோஜ் நீ மட்டும் ஒரு பொய் சொல்ல வேண்டும். நீ ஹோட்டலில் வேலை பார்ப்பவன் அல்ல, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்று மட்டும் சொன்னால் போதும் நான் இந்த  வரனையே  உனக்கு முடித்து விடுகிறேன் என்று கூறினான்.


மனோஜும் பெண்ணின் போட்டோவை பார்த்து அவள் மீது காதல் வயப்பட்டு சரி என்று தலையாட்டினான். "நீங்கள் என்ன சொன்னாலும் சரி தரகரே நான் செய்கிறேன்" என்று கூறினான். தரகர் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை மனோஜ் பேச்சுலர் விடுதியில் தங்கியுள்ளான். கல்யாணம் முடிந்தவுடன்  தனிக்குடித்தனத்திற்கு   வீடு பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று கூறினான். 


பெண் வீட்டாரோ மனோஜின் போட்டோவை பார்த்து மாப்பிள்ளை பையன் பரவாயில்லை... நன்றா....கத்தான் இருக்கிறான் என்று ஒப்புக் கொண்டனர். என்ன? வேலை செய்கிறான் மாதத்திற்கு எவ்வளவு வருமானம் என்று பெண் வீட்டார் வினவினர். அதற்கு தரகர் மாப்பிள்ளை தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறான். மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா கிடையாது. உங்கள் பெண்ணிற்கு மாமனார் மாமியார் பிரச்சனை இல்லை என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு, வருமானம் ஒரு லட்சம் என்று சத்தமாக கூறிவிட்டு 5 மாதத்திற்கு என்பதை மனதிற்குள் கூறினான். 


தரகரின் மைண்ட் வாய்ஸ் யாருக்கும் கேட்கவில்லை. ஹா... ஹா... ஹா... தினமும் அவர் அலுவலகத்தில் ஒரு 100  பேரையாவது  சந்திப்பார் என்றும் பொய்யுரைத்தான் தரகர். கோவிலில் பெண் பார்க்கும் படலம் நடந்து நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. தரகர் மனோஜையும்  மணப்பெண்ணையும் சேர்ந்து பேசவே விடவில்லை.


கல்யாணம் ஆகும் வரை நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேள்...மனோஜ்... என்று உத்தரவிட்டான் தரகர். ஆனால் யாரை பார்த்தும்  நீ சல்யூட் அடிக்கக் கூடாது கல்யாணம் முடியும் வரை என்று  ஆர்டர் செய்தான். அவ்வாறே மனோஜும் இசைந்தான். பெண் வீட்டினர் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் திருமண பத்திரிக்கை அழைப்பிதழ் கொடுத்துவிட்டனர். மனோஜிற்கு தரகர் மட்டும்தான் உறவு.


கல்யாண தேதியும் வந்துவிட்டது. பெருமாள் கோவிலில் கல்யாணம்.அன்று காலை மனோஜ் மிகவும் அழகாக பட்டு வேஷ்டி சட்டையில்  ஜொலி ஜொலித்தான் . மணப்பெண்ணும் பட்டுப் புடவையில் அணிகலன்கள் அணிந்து அழகாக மின்னினாள். மணமேடையில் மனோஜ்& மணப்பெண்ணும் வந்து அமர்ந்தனர்.


மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் அடிக்கடி மனோஜ் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர். கோவிலுக்குள் வந்து கல்யாணம் நடக்கும் இடத்தில் வந்து நின்றார். உடனே மனோஜ் அவரை பார்த்த பழக்க தோஷத்தில் சல்யூட் செய்து விட்டான்.


அவ்வளவுதான் வந்த உறவினர் மணப்பெண்ணின் அப்பாவை பார்த்து என்ன ஹோட்டலில் வேலை செய்பவனுக்கா!... உன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறாய்?... என்று சத்தமாக கூச்சலிட்டார். என்னிடம் அவன் தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறான் என்று தானே கூறினாய்.  மணப்பெண்ணின் அப்பா இல்லை, இவர் தனியார் அலுவலகத்தில் வேலை செய்வதாக தான் தரகர் கூறினார் என்றார். அதிலும் தரகர் என் நெருங்கிய நண்பர் அதனால் தான் நான் எதையும் விசாரிக்கவில்லை. உடனே கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என்று  தலைமேல் கை வைத்து வருத்தமடைந்தார்.


உடனே மனோஜ் நான் இதைப் பற்றி தரகரிடம்  முன்பே கேட்டேன். ஆனால்,அவர் 'ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்' என்று எனக்கு தைரியம் கொடுத்தார். நாம் இரண்டே 2 பொய்  தான் சொல்லி இருக்கிறோம் இன்னும் பாக்கி 998 இருக்கிறது. அவர் கூறியதை நான் முழுமையாக நம்பினேன் என்று உண்மை உரைத்தான் மனோஜ்.


உடனே பெண் வீட்டினர் கோபப்பட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டனர். நல்லவேளை கல்யாணத்திற்கு முன்பே இந்த பொய் தெரிந்தது என்று மனதில் தைரியத்துடன் அப்பாடா... தப்பித்தோம்... என்று   அவர்கள் மனோஜிடம் அது "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு "என்னும் பழமொழி அல்ல டா... "ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் பண்ணு " என்பதாகும். பழமொழியை நன்றாகத் தெரிந்து கொள் என்று கூறி, மணப்பெண் வீட்டினர் தப்பித்தோம்.. பிழைத்தோம்...  என்று பெருமாளுக்கு நன்றி கூறி வெளியேறினர். 


மனோஜும் தரகரிடம் இனிமேல் பொய் கூறாமல் என் நிலைமைக்கு ஏற்றவாறு பெண்ணை தேடுங்கள் என்று கூறிவிட்டு பெருமாளுக்கு நன்றி கூறி கிளம்பி விட்டான்.


மேலும் இது போன்ற "சிந்திக்க ஒரு கதை" -சுவாரஸ்யமான  கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவு என்னும் ஒளியை ஏற்றுமே.. அன்பை தீப ஒளியாய் பரப்புமே!

news

"ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணு".. சிந்திக்க ஒரு கதை (1)

news

ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டில் முதல்முறையாக 15 நாட்கள் விடுப்பு அறிவிப்பு!

news

ஆளுநரை சந்தித்த உதயநிதி : கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்

news

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆளுநர் ஆர்லேகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு –தமிழக அரசு மீது புகார்

news

டிச.2-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கண்டனம்

news

ஹோபோனோபோனோ.. எண்ணம் போல் வாழ்க்கை (5)

news

தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் உதயநிதி மனு

news

சட்டப் போராட்டத்தின் முதல் அடி.. வேரில் இருந்து விழுது வரை (10)

அதிகம் பார்க்கும் செய்திகள்