தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
புது டெல்லி: பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டுடன் கல்வி நிதி தொடர்பாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி பிரதான் பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதேசமயம், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான மேலிடப் பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.
பீகார் தேர்தலுக்கு தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. சி.ஆர். பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக தேர்தலுக்கு பைஜயந்த் பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது. முரளிதர் மோஹோல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்திற்கு பூபேந்திர யாதவ் தேர்தல் பொறுப்பாளராகவும், பிப்லாப் குமார் தேப் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.