அரசியலில் இல்லாத ரஜினிகாந்த்தை.. மாதாமாதம் அண்ணாமலை சந்திப்பது ஏன்.. என்ன திட்டம்?

Sep 23, 2025,01:42 PM IST

சென்னை : தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு  நாட்களாக அமமுக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரையும் சந்தித்து வருகிறார். இதற்கு பின்னால் இருக்கும் திட்டம் என்ன என்பது பற்றி ஒன்றும் புரியாமல் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.


அதிமுக-பாஜக கூட்டணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என கூறி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது.


இதைத் தொடர்ந்து இன்று காலையிலும், மீண்டும் அண்ணாமலை, டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது நான் சென்னையில் இல்லை. அதனால் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அவரை கூட்டணியில் மீண்டும் சேர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளேன். அதை ஏற்பதும் ஏற்காததும் தினகரனின் விருப்பம். 


ரஜினியைச் சந்திக்க என்ன காரணம்?




மாதத்திற்கு ஒரு முறையாவது ரஜினியை சந்தித்து ஆன்மீகம் குறித்து பேசுவேன். கூட்டணியை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓபிஎஸ்.,ஐயும் சந்திக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.


இதுதான் பலரையும் குழப்ப ஆரம்பித்துள்ளது. ரஜினிகாந்த் அரசியலில் இல்லை. அதேசமயம், பிரதமர் மோடியை அவர் வெகுவாக ஆதரிப்பவர், அவரைப் புகழ்ந்து பேசுபவர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் திட்டமிட்டபோது அவருடன் முக்கியமாக இணைந்தவர் அர்ஜூன் மூர்த்தி. அவர் பாஜகவைச் சேர்ந்தவர். ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் அவர் மீண்டும் பாஜகவுக்கே போய் விட்டார்.


ரஜினி அரசியலில் இல்லாவிட்டாலும் கூட அவரைச் சுற்றி ஒரு வகையான அரசியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது ரஜினிக்கே கூட தெரிந்திருக்கலாம். அந்த அரசியலை பாஜகவும் பயன்படுத்திக் கொள்ளும், திமுகவும் பயன்படுத்திக் கொள்ளும். சாதுரியமாக அவர்கள் ரஜினியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது நீண்ட காலமாக நடந்து வருவதுதான். ரஜினியை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளாத கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான்.


சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை கூட்டணியை சரியாக கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை என குற்றம்சாட்டி பேசி இருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக.,வின் மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் கட்சி தலைமையிட தலைவர்களை சந்திக்க நேற்று டில்லி சென்றார். அவர் டில்லி சென்றுள்ள இந்த நிலையில் அண்ணாமலை, அடுத்தடுத்து தினகரனை சந்தித்துப்பதும், கூட்டணியை ஒன்றிணைப்பதாக சொல்வதாக அனைவரிடமும் குழுப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.




கூட்டணியை ஒன்றிணைப்பது தான் அண்ணாமலையின் நோக்கம் என்றாலும், கூட்டணி கட்சிகளுடன் பேச வேண்டிய வேலையை செய்ய வேண்டியது மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் தான். கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அமைதி காக்கும் நிலையில், அண்ணாமலை மட்டும் எதற்காக இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது? அதோடு, தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அண்ணாமலை அடிக்கடி எதற்காக ரஜினியை சென்று சந்தித்து வருகிறார்? ஆன்மீகம் பற்றி தீவிரமாக அடிக்கடி ஆலோசனை நடத்த என்ன உள்ளது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஒரு வேளை அதிமுகவின் பிரிந்து கிடக்கும் சக்திகளை இணைக்கும் வேலையில் ரஜினியையும் பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறதா என்ற கேள்வியும் கூட எழுந்துள்ளது. ஆனால் இதுவரை அதில் எந்தத் தெளிவும் இல்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைத்து வலுவாகன கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ள அண்ணாமலையில் முயற்சி பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: எம்பிக்களுக்கு முதல்வர் முகஸ்டாலின் உத்தரவு

news

மக்கள் பணத்தில் பொது இடங்களில் சிலை வைக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

news

முத்துமலை முருகன் கோவில்.. தமிழ்நாட்டில் முருகனுக்கான முத்திரைக் கோவில்களில் ஒன்று!

news

Poonam Pandey: ராவணனின் மனைவியாக பூனம் பாண்டே நடிக்க... பாஜக கடும் எதிர்ப்பு

news

ஆபரேஷன் நும்கூர்: துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

news

அரசியலில் இல்லாத ரஜினிகாந்த்தை.. மாதாமாதம் அண்ணாமலை சந்திப்பது ஏன்.. என்ன திட்டம்?

news

அக்டோபர் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு

news

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய் கருத்தை வரவேற்கிறேன்: அண்ணாமலை

news

Gold rate.. தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.. பெரும் கவலையில் பெண்களைப் பெற்றோர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்