மதுரை: தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தேர்தலுக்கான அடித்தள பணிகளை தொடங்கி உள்ளோம், அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கோவையில் 14ம் தேதி, சென்னையில் 17ம் தேதி, திருச்சியில் 19ம் தேதி ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்.25ம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
விஜய் கட்சியின் வாக்கு சதவீதம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவீதத்தை சொல்லி வருகிறார்கள், ஆனால் யாரும் 10 சதவீதத்திற்கும் குறைவாக சொல்லவில்லை. தமிழகத்தில் எதிர்மறை வாக்குகள் ஆட்சியாளர்களை எதிர்த்து அதிகரித்து வருகிறது என்பதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. குறிப்பாக போதை பொருட்கள் விற்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மார்க் கடையையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் திருப்புவனம் காவலாளி அஜித் கொலை அதிர்ச்சியான சம்பவம் அதைத் தொடர்ந்து நெல்லையில் ஆணவ கொலை போன்ற செயல்பாடுகள் மிகுந்த அச்சத்தை தமிழக மக்களிடம் கொடுத்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொதுவாகவே அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டிய நிலை இருக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது அரசின் செயலற்ற தன்மையினை ஏடுத்துக்காட்டுகிறது.
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
{{comments.comment}}