இருளை இருளால் விரட்ட முடியாது!

Jul 25, 2026,11:56 AM IST

- இரா. மும்தாஜ் பேகம்


கடந்த காலத்தின் சோகங்களையும் எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தையும் தவிர்த்து வாழ்ந்தால் . நிகழ்கால வாழ்க்கை இனிமையாக அமையும். 


-


பார்க்கும்போது ரசிக்கும் கண்களை விட, பார்க்காத போது நினைத்துத் தவிக்கும் மனதில் தான் உண்மையான அன்பும் பாசமும் இருக்கும்.


-


அருகதை இல்லாத இடத்தில் அன்பை செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன் என்று சொல்லக்கூடாது. தப்பித்து விட்டேன் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும். 


-


இருளை இருளால் விரட்ட முடியாது. ஒளியால் மட்டுமே அதை செய்ய முடியும். அதே போன்று வெறுப்பை வெறுப்பால் விரட்ட முடியாது அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும். 


-




மலை போல் அறிவு இருப்பினும் பொறுமைக்கு ஈடாகாது.கடல் போல் பணம் இருந்தாலும் அன்புக்கு ஈடாகாது 


-


செய்யும் துரோகங்களுக்கு அவரவர் மனசாட்சி தரும் தண்டனையே போதுமானது மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டும். 


-


அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது 


-


ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த பிறகு தான் தெரிகிறது தவறவிட்ட ஆரோக்கியம்தான் உண்மையான செல்வம் என்று.


-


முட்டாள்தனத்தால் ஏமாந்தவர்களை விட இரக்க குணத்தால் ஏமாந்தவர்களே அதிகம். ஏனெனில், இது பச்சோந்திகளும் துரோகிகளும் வாழும் பூமி. 


-


சரியான முடிவுகள் எடுத்தால் வெற்றிகள் கிடைக்கும். தவறான முடிவுகள் எடுத்தால் அனுபவம் கிடைக்கும் இரண்டுமே வாழ்க்கைக்கு அவசியம் 


(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்