மூன்றாம் பிறை.. விருதுகளையும், இதயங்களையும் வென்ற படம்!
- கவிஞர் க. முருகேஸ்வரி
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் ஒளிப்பதிவில் ஒளிர்ந்த திரைப்படம் மூன்றாம் பிறை.......
பாலுமகேந்திராவின் கேமரா பார்வையே வேறு தான்.... இந்தத் திரைப்படத்தில் இயற்கையோடு கொஞ்சி விளையாடிருக்கும்....
ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் என்ற வகையில் கேமரா வழியாகவும் சில வசனங்களை சொல்லிவிட்டுச் சென்றிருப்பார்...
பூங்காற்று புதிரானது.... பாடலிலும்... கண்ணே கலைமானே பாடலிலும் ஊட்டியின் அழகை ஊடுருவி சென்றிருக்கும் பாலுமகேந்திராவின் கேமரா....
கமல்ஹாசனுக்கு உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரம்... ஸ்ரீதேவியை ஒரு விரும்பத்தகாத இடத்தில் இருந்து காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் சென்று ஒரு குழந்தையைப் போல் பாதுகாக்கும் கேரக்டர்.....
இப்படி ஒரு அழகான பைத்தியத்தை .... மன்னிக்கவும் மனநலம் சரியில்லாத கேரக்டரை ஸ்ரீதேவியைத் தவிர வேறு யாராலும் அழகுபடுத்தியிருக்க முடியாது....
சுப்பிரமணி சுப்பிரமணி என்று கொஞ்சி கொஞ்சி விளையாடும் போதும்.... ஆட்ரா ராமா...ஆட்ரா ராமா....என்று கமலுடன் குரங்கு வித்தை காட்டும் போதும்...விரல் சூப்பி தூங்கும் போதும் விஜியாகவே வாழ்ந்திருப்பார் ஸ்ரீதேவி....
நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும் ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும் டும் டும் டும்
என்று கமலும் ஸ்ரீதேவியும் நடிப்பில் போட்டி போட்டு அசத்தியிருப்பார்கள்...
சில்க் ஸ்மிதாவின் ரசிகையான எனக்கு இந்தத் திரைப்படத்தில் அந்த கேரக்டர் தேவைதானா என்று தோன்றியது....
கண்ணே கலைமானே....
இது போல் ஒரு காதல் தாலாட்டு இனிமேல் வாய்ப்பில்லை....யேசுதாஸ் அவர்களால் பாடப்பட்ட தாலாட்டு....அந்தப் பாடலை அவர் பாடியது போலவே அனுபவித்து நடித்திருப்பார் கமல்ஹாசன்......உனக்கே உயிரானேன்....
எந்நாளும் எனை நீ மறவாதே.... என்ற வரிகளில் கமலின் தவிப்பு .....அவருக்கே உரியது...
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சந்நிதி... கவியரசு கண்ணதாசனின் கடைசி வரிகள்....
அவரின் கடைசிப் பாடல்... காலத்தால் அழியாத பாடல்.....
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை... கண்ணே கலைமானே பாடல் ராஜாவுக்கே உரிய ராஜகீதம்...
தன்னை யாரென்றே தெரியாமல் மறந்து விட்டு விஜி செல்லும் கிளைமாக்ஸ் காட்சியில் தனது உச்சகட்ட நடிப்பில் அத்தனை உள்ளங்களையும் கட்டிப்போட்டு கண்ணீர் விட வைத்திருப்பார் கமல்ஹாசன்..
உனக்கே உயிரானேன்... இந்நாளில் நீ என்னை மறந்தாயே.
என்ற வலி நிறைந்த வார்த்தைகளோடு ... முடியும் இந்தத் திரைப்படம் எண்ணற்ற இதயங்களை வென்றதோடு இல்லாமல் எண்ணற்ற விருதுகளையும் வென்றிருக்கிறது!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).