விழியில் விழி மோதி!

Jan 17, 2026,12:53 PM IST
 கவிஞர் க.முருகேஸ்வரி

பெண்கள் பொதுவாக திரைப்படத்தில் வரும் கதாநாயகனைத் தான்‌ அதிகம் ரசிப்பார்கள்.

சில நேரங்களில் சில கதாநாயகிகள்... ஸ்ரீதேவி..... நதியா.... குஷ்பு... ரேவதி....அர்ச்சனா.... இன்னும் சிலர் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி பெண்களைக்‌ கவர்ந்த கதாநாயகிகளாக வலம் வந்தனர். அப்படி ஒரு கதாநாயகி தான்  ஷாலினி... 

காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் மினி என்னும் கதாபாத்திரத்தில் வந்து ... முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் தான் (முன்னாள் பேபி) ஷாலினி.....

எப்போதும் விரித்த கூந்தலும், சல்வாரும் அணிந்து......அவரின் மென்மையான பார்வையாலும்........ தனித்துவமான குரலாலும் நம் மனதைக் கொள்ளை கொண்டவர்.





காதலர்களின் தேசிய கீதமாக ஒலித்த அந்தப் பாடல்...... என்னைத் தாலாட்ட வருவாளோ..... இப்போது கேட்டாலும்... பார்த்தாலும்.....நம்மைத் தாலாட்டி விட்டுத்தான் செல்கிறது.......

அந்தப் பாடல் முழுவதும்........மினி.. வெட்கம் கலந்த காதலுடன் பயந்த விழிகளில் பார்ப்பது......நடப்பது மட்டுமே வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும்...

பெண்கள் தலை வாரி பூச்சூடினால்‌ தான் அழகு என்ற விதியை மாற்றிய என் தலைவி தான் ஷாலினி!!!!!!!

மினியாக மாறி ஜடை பின்னாமல் என் அம்மாவிடம் அடி வாங்கியது இப்போது நினைத்தாலும் இன்னும் இனிக்கிறது
(வலிக்கிறது) 

பூவே பூச்சூடவா வில் நதியாவை அறிமுகம் செய்த இயக்குனர் பாசில் தான் காதலுக்கு மரியாதை மூலம் 
மினி என்னும் கதாபாத்திரத்தில்‌ ஷாலினியையும் நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்!!!!!!!

விழியில் விழி மோதி பாடலோடு  படத்தில் மினி தோன்றும் அந்தக் காட்சி love and love only. அந்தப் பாடலின் ஒவ்வொரு அசைவிலும் மினியின் கண்கள் சொல்லும் கதையே தனி அழகு. கேமரா அவரது முகத்தை நெருங்கி வரும்போது, அந்த விழிகளில் தெரிகின்ற மென்மையான காதலும், சிறு வெட்கமும் பார்ப்பவர்களின் இதயத்தை மெல்ல வருடிச் செல்லும். "காதல் மட்டுமே" (Love and Love only) என்பதற்கு இலக்கணமாக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தன் மௌனமான பார்வையின் மூலமே மினி அந்த இடத்தைப் பிரம்மாண்டமான ஒரு காதல் காவியமாக மாற்றிவிடுவார்.





திரையில் அந்தப் பாடல் ஓடும்போது, சுற்றியுள்ள உலகம் அப்படியே நின்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். மினியின் புன்னகையும், அவரது கண்களில் மின்னி மறையும் அந்த உணர்ச்சிகளும் ரசிகர்களை அவரது காதலுக்குள் கட்டிப்போட்டுவிடும். வெறும் பாடலாக இல்லாமல், ஒரு ஆன்மாவின் தேடலாக மாறும் அந்தக் காட்சி, காதலின் உன்னதத்தை மிகத் தூய்மையாகப் பிரதிபலிக்கும். அது ஒரு காட்சி மட்டுமல்ல; பார்த்த கணத்திலேயே மனதின் ஆழத்தில் ஒரு சுகமான வடுவை உண்டாக்கும் ஒரு அழகான கவிதை.

(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருக்குறள் திருவிழா.. மூத்த குடிமக்கள், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவம்!

news

இனிமை சேர்ந்திடவே இதயமும் மகிழ்ந்திடவே.. காணும் பொங்கல்!

news

ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக

news

பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

news

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த தலைவர்: எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து!

news

ஜனவரியில் அரங்கேறிய வரலாறு.. மெட்ராஸ் மாகாணம் எப்படி தமிழ்நாடு ஆனது?

news

விழியில் விழி மோதி!

news

கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்