எங்களுக்கும் இந்த உலகம் உண்டு!

Su.tha Arivalagan
Nov 11, 2025,04:22 PM IST

- மகாலட்சுமி


பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த என் பிள்ளை

நான் பெயர்  சூட்டும் முன்பே-இந்த

சமூகம்  சூட்டிய பெயர் ஊனமுற்றவர்


நான் கருவை சுமந்து கண்ட கனவையெல்லாம் கலைத்து விட்டாயே!

நான் உன்னிடம் வேண்டியது எல்லாம் புதைத்து விட்டாயே!

உயிர் இருந்தும் உணர்வை எல்லாம் பறித்து விட்டாயே!

இந்த உலகில் என்னை வாழவிடாமல் மறைத்து விட்டாயே!

ஊனமாய் பெற்றெடுத்தது என் குற்றமா! இல்லை

ஊனமாய் குழந்தை கொடுத்தது உன் குற்றமா


நான் யாரிடம் கூறி அழுவேன் என் குறையை-இந்த

உலகில் இரக்க குணம் இல்லாமல் இருப்பவர்கள் ஊனமா?

இல்லை ஒரு பாவமும் அறியாத என் குழந்தை ஊனமா?




மனித நேயம் இல்லாதவனை மனிதன் என்கிறோம்.

மாற்று மனம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளி என்கிறோம்

திருட்டு,கேலி, கிண்டல் செய்பவர்கள் இன்பமாய் வீதியில் திரிகிறார்கள்

மாற்று திறனாளியை பெற்றதால் என் குழந்தை வீட்டில் அடைக்கப்படுகிறான்.

ஊரில் உள்ள சிலைகளுக்கெல்லாம் கோவில் கட்டுகிறார்கள்.

ஆனால்.. மாற்றுத் திறன் உள்ளவர்களை கேலி, கிண்டல் செய்து சந்தோசமடைக்கின்றனர்.

மூட நம்பிக்கை முற்றிப் போய் முட்டாளாய் திரிகிறான் மனிதன்.

ஆனால் புத்தி உள்ள மனிதனை போய் ஊனம் என்கிறது இந்த உலகம்.


எங்களுக்கும் இந்த உலகம் உண்டு என்று சட்டம் சொல்லுது.

இதை நம்பி வெளியில் போனால் சமூகம் எங்களை எதிர் கொள்ளுது.

போராட்டம் நிறைந்த இந்த சமூகத்தை எதிர்த்து நிற்பேன்

எங்களுக்கும் எதிர்காலம் உண்டு என நினைக்கிறேன்.