ஒவ்வொரு நாளும் தொடங்கும்.. வெள்ளைக்காகிதமாய்.....!
- கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன்
சென்னை: ஒவ்வொரு நாளும் நமக்கு பல நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன. அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
இன்றைய சிந்தனைத்துளிகள்..
விட்டுக்கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுங்கள்....
தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேளுங்கள்...
முயற்சி செய்தால் ஊக்கப்படுத்துங்கள்......
தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள்......
நம்மால் இயலாது என்பது மற்றொருவரால் செய்யப்படுகிறது என்றால் அது நம் கவனச்சிதறலே தவிர செய்ய முடியாதது இல்லை...
செய்தவர் சாதனை படைத்தவர் ஆகிறார்...
நாமே நமக்கு ஊக்கமூட்டி அதை நீ உணர்ந்திடு சாதனை பல படைத்திடு.....
நாளும் வாழ்க்கையும்
ஒவ்வொரு நாளும் தொடங்கும்
வெள்ளைக்காகிதமாய்.....
ஒவ்வொரு இரவும் கடக்கும்
வண்ணக்காகிதமாய்......
வாழ்க்கை ஒரு
புத்தகமாய்...
ஒவ்வொரு பக்கத்திலும்
திருப்பு முனையாய்.....
தினமும் பக்கங்கள் புத்துணர்வாய்......
ஏங்கி காத்திருக்கும் உன்
பதிவுக்காய்...
உன் வாழ்க்கைப் புத்தகம்
உனக்கே உனக்காய்.....
நீ மட்டும் வண்ண ஓவியம் தீட்டுவதற்காய்....
பக்கங்கள் புரட்டி முதுமையில் ரசித்து வாழ்வதற்காய்.
இளைய தலைமுறைக்கு
அனுபவம் கூறுவதற்காய்....
உனக்கு சிறந்த நண்பன் நீயே ஆவதற்காய்.....
பிறரும் புரட்டிப் படிக்கும்வரலாறு ஆக்குவதற்காய்......
ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப்புத்தகத்தில் அங்கம்தான்.......
நம் வரலாறு கூறும் காலச்சுவடிதான்.......
(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)