எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
- மு.ரம்யா ஆனந்த்
எல்லோருக்காகவும் வாழ்ந்தேன்,
என் ஆசைகளை மறந்தேன்!
அன்பு காட்டும் உறவுகளுக்காக,
அனுதினமும் என்னையே தொலைத்தேன்!
காலையில் தொடங்கும் கடமைகள்,
இரவு வரை தொடரும் வேலைகள்!
என் மனம் என்ன சொல்லுதென்று,
கேட்கக்கூட நேரமில்லை!
மற்றவர் சிரிப்பில் மகிழ்ந்தேன்,
மற்றவர் துயரில் கலங்கினேன்!
என் கண்ணீரை மறைத்துக்கொண்டு,
புன்னகையோடு நடந்துவந்தேன்!
இத்தனை நாள் இப்படித்தானே,
என் வாழ்க்கையும் கடந்துவிட்டது!
இனி எனக்குப் பிடித்த கனவுகளுக்கும்,
என் இதயத்தில் இடம் கொடுப்பேன்!
குடும்பத்தை நேசிப்பேன்,
என்னையும் கொஞ்சம் நேசிப்பேன்!
எல்லோருக்கும் ஒளி தரும் விளக்காய்,
என் வாழ்க்கை மற்றவர்களுக்காக மட்டுமல்ல,
எனக்கான கனவுகளுக்காகவும் தான்!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)