ஐ ஆம் பாவம் .. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

Su.tha Arivalagan
Jul 21, 2026,01:38 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


சமூக அறிவியல் பாடம் என்‌ மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பாடம்.


ஏனெனில் சமூகவியல் பாடத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் அனைத்தும் மிக சிறப்பாகவும் மாணவர்களிடையே ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும். 


எனவே என் மாணவச் செல்வங்கள் சமூக அறிவியல் பாடம் என்றாலே குஷியாகி விடுவார்கள்.... அப்படித்தான் ஒரு நாள் கண்டங்கள் கடல்கள் பாடத்திற்கு நிலமா நீரா என்ற செயல்பாடு....


இசை நாற்காலி விளையாட்டு மூலம் தொடங்கும் அந்த நிலமா நீரா செயல்பாடு.... அந்த இசை‌ நாற்காலி வெற்றியை விளையாட்டு மூலம் ஏழு மாணவர்களை நீராகவும் 5 மாணவர்களை நிலமாகவும் பிரித்த பிறகு....




அடுத்ததாக கண்டங்கள் படங்களை மாணவர்கள் வரைபடத்தாளில் வெட்டி ஓட்ட வேண்டும்... அதற்கு இடையே கடல்களின் பெயர்களை எழுத வேண்டும் ... இது முடிந்த பிறகு கப்பல் செய்து ஒரு கண்டத்திலிருந்து கப்பலில் மற்றொரு கண்டத்திற்கு செல்வது ....


ஏரோபிளேன் செய்து ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு வான் வழியாக செல்வது என அந்த செயல்பாடு அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ... என் மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காலையிலிருந்து இந்த செயல்பாட்டை விடாமல் நான் கப்பலில் போகிறேன்... நான் ஏரோபிளேன் ஓட்டுகிறேன் என்று என்னை  அந்த செயல்பாட்டை முடிக்க விடாமல் பாடாய்ப் படுத்தி விட்டார்கள்....


ஃபோட்டோ, வீடியோ எடுத்து ஸ்டோரேஜ்ஜும் ஃபுல்....  ஒரு செயல்பாடு ஒரு நாள் முழுவதும் ஓடியது என்றால் ,அது இந்த செயல்பாடு தான் .. என்ன விட்டுடுங்கடா ....ஐ ஆம் பாவம் என்று என்னைக் கதற வைத்து விட்டார்கள்....


அட்டகாசம் தொடரும்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).