மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!

Jul 20, 2026,03:15 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி

 

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க மாவட்ட அளவில் Resource person ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தேன்...


திரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் எங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டது...


மாநில அளவில் ஒரு PPT தயாரிக்கப்பட்டு அதை காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்...


குழந்தைகள் படைப்பாளராக.... என்ற தலைப்பில் இரண்டு குழந்தைகள் அதில் இடம் பெற்றிருந்தனர்.என் மாணவச் செல்வங்கள் போல் எனக்குத் தெரிந்தது...


அருகில் இருந்த ஆசிரியையிடம் என் வகுப்பு மாணவர்கள் போல் இருக்கிறார்கள்... மீண்டும் ஒரு முறை அந்தப் படத்தைக் காட்ட சொல்லலாமா என்றேன்... வேண்டாம் மிஸ்...வேற குழந்தைகளாக இருக்கும் என்றார்..


நான் எழுந்து அதை மீண்டும் காட்ட சொன்னேன்... ஆமாம்...அது என் செல்லங்கள்... பிரணிதாவும், கமலேஷும்....




என் கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தேன். மாநில அளவிலான கருத்தாளர்கள் என்னை அழைத்து பாராட்டினார்கள்...


வகுப்பில் என் மாணவச் செல்வங்களிடம் இதைப் பகிரும் பொழுது ஆரவாரமாகக் கைதட்டினார்கள்...ஒவ்வொரு பருவத்திற்கும்  கருத்தாளராக செல்லும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்...


மாநில அளவிலான பயிற்சி வீடியோவில், பயிற்சிக் கையேடுகளில் என் வகுப்பு மாணவர்கள் இடம் பெற்று இருப்பார்கள்..... ஒரு முறை என் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது..


நான் பயிற்சிக்கு சென்றிருக்கிறேன் என்றால்... பயிற்சி முடிந்து திரும்பியதும் என் மாணவர்கள்...மிஸ்,இந்த வாட்டி நம்ம கிளாஸ் ஃபோட்டோ வந்ததா என்று ஆர்வமுடன் கேட்பார்கள்....


இதை விட ஒரு சிறப்பான தருணம் என்னவென்றால்.... மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகத்திலும் என் மாணவச் செல்வங்களின் புகைப்படங்கள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளன....




நான் ஒவ்வொரு செயல்பாட்டையும் விடுபடாமல் இயன்றவரை செய்து முடிப்பேன்... என் மாணவர்களும் எந்த ஒரு வேலை கொடுத்தாலும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள்..


அதை மாநில அளவிலான குழுவில் பதிவிட்டதன் விளைவு தான் இந்த அங்கீகாரம்.... இதனால் கிடைத்ததே இந்த பாராட்டுக்கள்...


மேலும் கலைத் திருவிழாவில் என் வகுப்பு மாணவி வசுமிதாவிற்குப் பேச்சுப் போட்டியில் பயிற்சி கொடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கச் செய்தேன், மாநில அளவிலும் கலந்து கொண்டாள்.

கனவு ஆசிரியர் இதழில் வண்ண வண்ண வகுப்பறை பகுதியில் என் வகுப்பறை இடம் பெற்றது,அந்த இதழில் என்னுடைய பேட்டி இடம் பெற்றது.


மாணவர்களால் நான்... மாணவர்களுக்காக நான்!


அட்டகாசம் தொடரும்...


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்