குழந்தைப் பாடல்.. காந்தி தாத்தா!
- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
காந்தி தாத்தா
குஜராத் போர் பந்தரில் ஒரு அன்புத் தந்தை....
அக்டோபர் இரண்டில் அவதரித்த அற்புதத் தந்தை..
விடுதலைக்காக பாடுபட்ட நம் தியாகத் தந்தை
ஒத்துழையாமை இயக்கம் கண்ட ஒப்பற்ற தந்தை
தண்டி யாத்திரை தலைமையேற்ற தன்னிகரில்லா தந்தை
அறவழி நின்று போராட்டம் கண்ட அகிம்சை தந்தை
வெள்ளையனை விரட்டியடித்த விவேக தந்தை
உண்மை பேச உதாரணமாய் வாழ்ந்த உத்தம தந்தை
எளிமை வாழ்க்கை கடைபிடித்த எங்கள் எளிய தந்தை
மகாத்மா காந்தி என்னும் அவரே நம் நாட்டின் தந்தை
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).