எழுத்து!
- கவிஞர் க.முருகேஸ்வரி
உண்மை நேர்மை நியாயம் துணிச்சல்...
இதுவே எழுத்தின் இலக்கணமாம்!
இல்லாத ஒன்றை எழுதாமல் ...
உள்ளதை உள்ளபடி ,
அதை நல்லபடி சொன்னால் ....
அதுவே எழுத்து என்றாகும்!
இல்லையேல் மாற்றாய்
எழுத்துப்பிழையாய் மாறிவிடும்.....
எழுத்து ..
நம் மனதில் தோன்றும் மலர்ச்சி!
உள்ளிருந்து வெளியேறும் உணர்ச்சி!
எழுத்தினால் உருவாகும் மாபெரும் புரட்சி!
மகாகவியின் எழுத்தே...
பற்றி எரிந்த
விடுதலைக் கிளர்ச்சி!
உடல் வலிமையை விட
எழுத்தின் வலிமையே
சாலச் சிறந்தது....
நல்ல எழுத்தாளனின்
ஒரு எழுத்து...
நல்ல எழுத்தாளனின் ஒரு எழுத்து...
படிப்போரின் வாழ்க்கையையே மாற்றும் தலையெழுத்து!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).