மனதில் உறுதி வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும்!

Su.tha Arivalagan
Jul 06, 2026,03:02 PM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


மனதில் உறுதி வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நினைத்ததை எண்ணத்தில்

திண்ணமாக்க வேண்டும்


எண்ணம் ஈடேற

வலிமையுடன் முயற்சி செய்ய வேண்டும்

தடைக்கல் வந்தால்

நெம்பி விட்டு

படிக்கல்லாக்க வேண்டும்




ஏமாற்றம் கிட்டினால்

ஏணியாக்கி உயரம் எட்ட வேண்டும்

துரோகத்தை தூர் வாரி

துணிச்சலாக்க வேண்டும்


தடை வரினும்

முயற்சியைக் கைவிடாமல்

உறுதியுடன் இருக்க வேண்டும்


எண்ணமதை எஃகாக்கி

அது வண்ணமாக மாற

போராட வேண்டும்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).