- அ. தாமஸ்
அனைத்திற்கும் பயப்பட்டு வாழ்வதை விட அனைவருக்கும் பயன்பட வாழ்தலே சிறப்பு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது நம்மை ஆற்றுப்படுத்தும்; அனைத்திற்கும் அஞ்சுவது நம் ஏற்றத்தையே தடுக்கும். எனவே தகுதியானவற்றிற்கு அஞ்சுவோம் தகுதியோடு அனைத்தையும் மிஞ்சுவோம்.
அனைத்திலும் நேர்மையையே கைக்கொண்டால் யாருக்கும் அஞ்ச வேண்டியதும் இல்லை எதற்கும் கெஞ்ச வேண்டியதும் இல்லை. நேர்மை நமதானால் நாமும் தலைக்கணம் அறவே அகற்றி தன்முனைப்பு ஒன்றையே ஏற்று தலை நிமிர்ந்து நிற்கலாம் எங்கும் எதிலும்.

பயம் பிறர் நம்மை அடிமைப்படுத்த பயன்படுத்தும் ஆகச் சிறந்த ஆயுதம். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டியே பயத்தால் நம்மைப் பலவீனப்படுத்துகிறார்கள். எனவே பயம் களைவோம் பயம் இல்லா புது யுகம் புனைவோம்.
நாம் கடமையில் கருத்தாய் இருந்தால் கடவுளும் நமக்கு உருத்தாய் இருப்பார். எனவே கடமையை கருத்தேற்றி இறை ஒன்றுக்கே அஞ்சுவோம். அஞ்சுபவனிடம் அதிகாரத்தைக் காட்டும் உலகம் துணிபவனிடத்தே பணிகிறது. எனவே பண்பாளரிடம் பணிவோம் பகையாளனிடமே துணிவோம்; இறை ஒன்றிலே என்றும் இணைவோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
{{comments.comment}}