தனிமை துறந்தவன்!

Jul 06, 2026,01:14 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஒற்றை மனிதன்

இருக்கிறான்!

இருக்கிறானா?

இருந்தும்;

இல்லாமல் ஆகி இருக்கிறான்! 

தாயற்ற அவன்,

ஓராயிரம்  எண்ணங்களில்

புதையுண்டு போய்

இயம்ப இயலா மந்தணங்களினால்;

மூச்சடைத்துப் போனான்.




இனிய தந்தையின் அன்பினால் மட்டும்; இன்னும் இருந்து கொண்டிருக்கிறான்.

தனியாய் இருக்கவும் இயலாமல்...

தனி மனிதனாய் 

தந்தையை தனியே விட்டு,

வெளியே கிளம்பவும் மனமின்றி; 

தயங்கி தவித்த அவனுக்கு, விடுதலை வந்தது.


வீட்டுச் சிறையிலிருந்து அவனை விடுவித்தது.

அன்பு தந்தையின் மரணம்.

அவன் பற்றின அந்தரங்கம் அவனோடு போகட்டும்!


வீட்டைப் பூட்டி வெளியேறினவனை, அக்காவின்

அலை பேசி அழைத்தது;

"தம்பி! எப்போ கிளம்புகிறே?

தனியா இருக்காதே." 


இள மென்னகை மின்னியதோ; அவன் முகத்தில்?

இனி தனிமை என்பதில்லை; அவனுக்கு.

அவள் அறிய மாட்டாள்; அதை.


அலைபேசியின்

 பழைய சிம் கார்டை  எடுத்து தெரு ஓரத்தில் வீசி;

புது  சிம் கார்டை 

செருகி பேசலுற்றான்; 

"இனி ஒரு  தளையில்லை.

புறப்பட்டு விட்டேன்!

நான் நம் இல்லம் வருகிறேன்!


அடுத்த  முனையில்

"வா! காத்திருக்கிறேன்" 

என்றான்; அவன்



(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலகத்தில் சிறந்த பூ எது?

news

பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்