அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

Aug 21, 2026,05:31 PM IST
- பாரதிராஜன்

தமிழ் திரை உலகில் துயரங்கள் தொடர்கின்றன. இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பிண்ணணி பாடகிகள் எஸ் ஜானகி, கே ஜமுனா ராணி ஆகியோரைத் தொடர்ந்து குணசித்திர நடிகை சவுகார் ஜானகி மறைந்துள்ளார்.

படிக்காத மேதையில் சிவாஜியுடன் நடித்த போது அவரின் முகத்தில் பொறுமை தெரியும். அவரே உயர்ந்த மனிதன் படத்தில் நடித்த போது அந்த பணக்காரத் தோரணை, சிவாஜி படத்தில் அவரை அடிப்பதை பெருமையாக ஏற்றுக் கொள்வார். 

இருகோடுகள் படத்தில் ஜெமினியுடன் நடித்த போது I talked about file not life. காவியத்தலைவி இரட்டை வேடத்தில்  ஒருநாள் இரவு பாடலில் அருமையான நடிப்பு. நவராத்திரி விழா பாடலில் புன்னகை மன்னன் பாடல்.  புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 




இயக்குநகர் சிகரம் பாலச்சந்தர் படங்களான பாமாவிஜயத்தில் காஞ்சனா, ஜெயந்தி யுடன் பாடிய ஆனி முத்து பாடல் அதன்பிறகு நடிகையுடன் நட்பு வேண்டும் என்பதற்காக, பாலையாவின் வரவு எட்டணா பாடலில் நடிப்பு. 

எதிர்நீச்சல் பட்டு மறக்க முடியாத ஒன்று. தெய்வம் படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த போது அந்த பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியான நடிப்பு. நீதி படத்தில் சிவாஜி, லாரி ஒட்டுநராக நடித்த வேஷத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி, விபத்தில் கணவனை இழந்த குடும்ப த்தில் நடித்த போது, சிவாஜியால் பாதிக்கப்பட்ட சவுகார் நடிப்பு பின்னி எடுத்திருப்பார். 

பாபு படத்தில் சிவாஜி ரிக்ஷாக்காரர் வேஷம், பாலாஜி வீட்டில், சிவாஜிக்கு வைத்த வடையை ஸ்ரீதேவி எடுக்க, சிவாஜி திடுக்கிட, சவுகாரும்,பாலாஜியும் சிரிப்பார்கள். கொஞ்ச நாளில் சவுகார் விதவையை சிவாஜி காப்பாற்ற படம் பயங்கர ஹிட். 

ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்த  தில்லுமுல்லுவில் டபுள் ஆக்ஷன் சூப்பரோ சூப்பர். தமிழ்த் திரையிலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார் என்பதே அவரது சிறந்த நடிப்புக்கு நல்ல உதாரணம்.

(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்