பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

Aug 21, 2026,05:11 PM IST

சென்னை : தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற மூத்த நடிகையான சௌகார் ஜானகி (94), மூச்சுத் திணறல் உள்ளிட்ட வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் காலமானார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வாரம் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் அதிகரித்து உடல்நிலை சீரற்றதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரது ஆரோக்கியத்தைக் கண்காணித்து வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இவரது மறைவு தென்னிந்திய திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ஏழு தசாப்த கால திரைப் பயணம்:




1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான 'ஷாவுகாரு' (Shavukaru) என்ற தெலுங்குத் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அப்படத்தின் வெற்றியால் 'சௌகார்' ஜானகி என்று அழைக்கப்படலானார். 1952-இல் 'வளையாபதி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, புகழ்பெற்ற இயக்குநர் கே. பாலசந்தரின் 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'இரு கோடுகள்', 'காவியத் தலைவி', 'தில்லு முல்லு' போன்ற பல முக்கியத் திரைப்படங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பு ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது. 'உயர்ந்த மனிதன்', 'புதிய பறவை', 'பணம் படைத்தவன்' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்தவர் செளகார் ஜானகி.


கமல்ஹாசனின் 'ஹே ராம்' மற்றும் சந்தானம் நடித்த 'பிஸ்கோத்' உள்ளிட்ட நவீன காலத் திரைப்படங்களிலும் இவர் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தார். சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்த இவர், இந்திய சினிமாவுக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்