எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

Aug 20, 2026,05:21 PM IST

சென்னை : அனைத்து எம்எல்ஏ.,க்களும் தங்களின் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று, தொகுதி பணிகளை விரைவாக செய்வதற்காக கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. 


நேற்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முக்கியமான 10 அறிவிப்புக்களை முதல்வர் விஜய் வெளிட்டார். அவற்றில் ஒன்று தான், அனைத்து எம்எல்ஏ.,க்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு. தொகுதி பணிகளை செய்வதற்காக கார், டிரைவர் படி, வாகன பராமரிப்புக்கு என நிதி வழங்கப்படும் என கூறி இதற்காக ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு எம்எல்ஏ.,க்கள் பலரும் நேற்றே சட்டசபையில் நன்றி தெரிவித்து பேசினார்கள்.


நன்றி தெரிவித்த எம்எல்ஏ.,க்கள் :


நன்றி தெரிவிக்கும் போது தவெக எம்எல்ஏ ஒருவர், கொடுக்கும் காரை இனோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்கிறார்கள் என்றார். 


இன்னொரு எம்எல்ஏ, "காதல் தோல்வியில் வேலை இல்லாமல் மற்றும் கார் இல்லாமல் இருந்தேன். இப்போது முதல்வர் விஜய் வேலையும் கொடுத்து காரும் கொடுத்திருக்கிறார். நான் சட்டசபைக்கு வரும் போது ரயில், ஆட்டோவில் தான் வருகிறேன். ஒவ்வொரு முறை நான் வரும் போது சட்டசபை காவலர்கள் நான் எம்எல்ஏ., என்பதை நம்பாமல் ஐடி கார்டு காட்ட சொல்லுவார்கள்" என்றார்.


அரசியல் விமர்சனங்கள் :




ஆனால் எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர். 90 சதவீதம் எம்எல்ஏ.,க்களிடம் கார் இருக்கும். எதற்காக இந்த கார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தார். 


எத்தனையோ திட்டங்கள் இருக்கும் போது எதற்காக கார் கொடுப்பதற்கு இத்தனை கோடி ஒதுக்கீடு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நிதி பற்றாக்குறை என்கிறீர்கள். எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பதற்கு மட்டும் எங்கிருந்து வந்தது நிதி? என திமுக.,வும் கேள்வி எழுப்பி உள்ளது.


இதற்கிடையில் கார் கொடுத்ததற்கு முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தவெக எம்எல்ஏ.,க்களின் சொத்து மதிப்புக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இனோவா கார் கேட்டவரிடம் (தவெக எம்எல்ஏ சண்முகம்) ஏற்கனவே 2 பென்ஸ் கார்கள் உள்ளதாம். 


ஆட்டோவில் சட்டசபைக்கு வருகிறேன் (பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன்) என்றவரிடம் ஏற்கனவே விலை உயர்ந்த கார்கள் இருக்கிறதாம். எம்எல்ஏ.,வாக இருக்கும் பெரும்பாலானவர்களிடம் ஏற்கனவே கார் இருக்கும். அப்படி இருக்கும் போது எதற்காக முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்? என்று பலரும் கேட்க துவங்கி உள்ளனர்.


ஏற்கனவே எம்எல்ஏ.,க்களுக்கு மாத சம்பளமாக ரூ.1.05 லட்சம் வழங்கப்படுகிறது. தற்போது முதல்வர் அறிவித்துள்ள டிரைவர் படி, வாகன பராமரிப்பு போன்றவற்றை சேர்த்தால் ஒரு எம்எல்ஏ.,வின் மாத சம்பளம் ரூ.1.80 லட்சமாகிறது.


ஆனால் கடைநிலை ஊழியராக நாள் முழுவதும் கடுமையாக உழைப்பவரின் மாத சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.20,000 மட்டுமே. உழைப்பவர்கள் இவ்வளவு குறைந்த சம்பளம் பெறுகையில், எம்எல்ஏ.,க்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் எதற்காக இவ்வளவு சலுகைகள். அதுவும் தமிழக அரசு தற்போது எதிர்கொண்டுள்ள மிக கடுமையான நிதி நெருக்கடி, நிதி பற்றாக்குறை சமயத்தில் எதற்காக இந்த அறிவிப்பு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


எம்எல்ஏ.,க்களுக்கு கார் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.210 கோடி நிதியை வேறு மக்கள் நல பணிகளுக்காக ஒதுக்கலாம். அல்லது மாநிலத்தின் வருவாயை பெருக்கக் கூடிய ஆக்கப்பூர்வமான துறைகளில் அல்லது திட்டங்களில் இதை முதலீடு செய்யலாம். மக்களுக்கு பஸ், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி ஆகிய திட்டங்களுக்காக இந்த நிதியை பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் பலர் யோசனைகளை வழங்கி, கோரிக்கை வைத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்