விடுதலை!

Aug 20, 2026,02:49 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


பூக்கள் தாவும் வண்ணத்துப்பூச்சிக்கும்


சிறகடித்து பறக்கும் 

சிறு குருவிக்கும்,

சுதந்திரம்  தந்தது எவர்?


எவருக்கும் எவரும் சுதந்திரம் தர இயலாது.


சுதந்திரம் ஒரு உள் உணர்வு;


சிந்தையில் அதை உணர்ந்தோர் மட்டுமே அறிவர்;அதை.




எட்டா உயரத்திலும்,

பரந்த வானிலும்,

கூட  விடுதலை  உணராதோர் உண்டு.


காணா பள்ளத்திலும்,

பூட்டிய வீட்டினுள்ளும்,


சிறகடித்து விண்ணில் பறக்கும் விடுதலையை உணர்வோரும். உண்டு.


வண்ணத்துப்பூச்சிக்கு, மலர் மது. 


சிறு குருவிக்கு  முற்றிய கதிர்.


இரைதேடலின் அவசியமே வரம்பு.


வரம்பற்ற ஒரு விடுதலை;

வேண்டாம் எவருக்கும்.


அதன் தனித்துவமும் தனிமையும் இனிக்காது; கைக்கும்.


ராக கட்டுக்குள்

தப்பாத தாள கதியில்


இசைக்கப்படும்

நல்லிசையென;


நுகர்வோருக்கு விடுதலை; 

அற்புதமான அனுபவம்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்