- சசிகலா விஸ்வநாதன்
சந்திரிகா பெரு மூச்சு விட்டாள். எப்படியாயினும் உன் அப்பாவிடம் சொல்லி விடு. சிவப்புக் கல் வளை கண்டிப்பாக வளைகாப்புக்கு போடவேண்டும்" என்று, மாமியார் கௌரி சொன்னதைக் கேட்டு அவளால் செய்ய முடிந்தது, அதுதான்.
அம்மாவிடம் தொலைபேசியில் திக்கு முக்காடி,எப்படியோ சொல்லிவிட்டாள். அம்மா அதிர்ந்து போனது திருச்சிராப்பள்ளியில் இருக்கும் சந்திரிகாவுக்கு நன்கு தெரிந்தது. "பாவம்! அவர்களும் என்ன செய்வார்கள். தாய்க்கு தலைப் பெண், ரோகிணி, ஒரே வருடத்தில் அறுபது நாள் கையில் குழந்தையுடன் வீடு வந்து சேர்ந்துள்ள, கைம்பெண். அடுத்த பெண் உடம்பு சரியில்லை என்று அவள் கணவன் கொண்டு விட்டுப் போயிருக்கிறான்.
பெண் துணை இல்லாத குடும்பம். வேலைக்கு போகும் கணவனால் அவளைப் பார்த்துக் கொள்ள இயலவில்லை என்ன செய்வான், அவன் ?. மாதா மாதம் செலவுக்கு பணம் அனுப்பி விடுகிறான். அடுத்தடுத்து கல்லூரிக்கும் பள்ளிக்கும் , போகும் தம்பிகள்; குடும்ப நிலை இப்படி இருக்க; "இவர் தன் அம்மாவிடம் சற்று சொல்லக்கூடாதோ" என்று மனதுக்குள் மட்டுமே அங்கலாய்க்க முடிந்தது. கல்லுள்ளிமங்கன். போல் சுகுமாரன் வாயை திறக்கவில்லை.

ரோகிணி அக்கா தனக்கு வளைகாப்பில் போட்ட சிவப்புக்கல் வளையை கொடுக்க முன்வர; சீமந்தம் நன்கு நிறைவேறியது. மாமியார் கௌரிக்கு மிகவும் திருப்தி; அலாதி பெருமை. சந்திரிகாவுக்குதான் மன உறுத்தல்;விதவை தமக்கையின் கல்வளை அவள் கையில் கனத்தது போல், அவள் மனதும் கனத்தது. அவள் மனதை யார் கவனித்தார்கள்? பேறு காலம் முடிந்து திருச்சி வந்தாயிற்று.
நாட்கள் உருண்டோட இதோ ஆயுஷ் ஹோமம் விருந்து உபசாரம் எல்லாம் முடிந்து , அனைவரும் சகஜமாக உரையாட ஆரம்பித்தனர் .அப்போதுதான் சந்திரிகாவின் மனதில் அந்த யோசனை உதித்தது .துணிவுடன் செயல்பட முற்பட்டாள்
சந்திரிகா, ரோகிணியிடம் "அக்கா! இந்த வளையலை சற்று போட்டுக் காண்பியேன்" என்றாள்.
அக்கா மறுக்க, பிடிவாதமாக அவள் கையில் போட்டு விட்டதும் அல்லாமல், "அக்கா! நீயே வளையல்களை வைத்துக்கொள். உன் கைக்குத் தான் இது எடுப்பாய் இருக்கிறது" என்றபடி மாமியாரின் தீ விழியை அலட்சியம் செய்தபடி கணவன் சுகுமாரனைப் பார்க்க, அந்த கல்லுள்ளிமங்கனின் முகம் சிறிதே புன்னகையில் மலர்ந்தது, போல் இருந்தது; நிசம்தானா என்று யோசித்தவாறே, அந்த இடம் விட்டு நகர்ந்தாள்,சந்திரிகா.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}