- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
இத் தென்னவனின்
தேவதையே!
இம் மன்னவனின்
மரகதமே!
என் கண்விழியின்
மெல் இமையே!
என் முகம் மலரும்
மென் தாமரையே!
சின்னஞ்சிறு கிளியே!
சிங்காரப் பூந்தோப்பே!
தென்றல் தாலாட்டும்
நறுமலர் வனமே!

நாடகத் தமிழே!
நாட்டியக் கலையே!
முக்கனிச் சுவையே!
முத்தமிழ் அழகே!
செப்பிட இயலா
இலக்கியத் தமிழே!
என் இதயம் கவர்ந்த
இன்னிசை மழையே!
என் இனிய பூபாளமே!
நம் இல்லம் கோகுலமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
{{comments.comment}}