- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
உன் மடிமீது
குழந்தையாக
மாறுகிறேன்
மனதளவில்!
அகவை அறுபதைத்
தாண்டிய முதியவனாக
இருக்கிறேன்
வயதளவில்!
அன்னையாய்
மாறுகிறாய்!
ஆறுதலாய்ப்
பேசுகிறாய்!
கொடுத்து வைத்தவன்
நான் என்று
ஊர் உலகம்
பேசுகிறது!

தவம் செய்தவன்
நான் அல்ல!
தனம் படைத்தவன்
நான் அல்ல!
ஆனால் என்னை
அவ்வளவு நேசிக்கிறாய்!
ஆண்டவனாய் என்
கண்களுக்குத் தெரிகிறாய்!
உயர்ந்த குணம்
உனக்கு!
தெளிந்த மனம்
உனக்கு!
ஆருயிர் மனைவியாக நீ!
ஆகாயத் தேவதையாக நீ!
ஆச்சரியத்தில் நான்!
அன்னபூரணியாய் நீ!
என் முன்னோர் செய்த
புண்ணியமா!
ஏழ் பிறப்பாய்த்
தொடர்கின்ற உறவா!
மகிழ்கிறேன் பெண்ணே!
உன் மனதில் ஒரு
களங்கம்
இல்லை!
கவலை
இல்லை!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்..மக்கள் ஆதரவு யாருக்கு?யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
{{comments.comment}}