National Tell a Joke Day என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நகைச்சுவை தினம்.
இந்த நாளின் முக்கிய நோக்கம், நகைச்சுவையின் மூலம் மக்களைச் சிரிக்கச் செய்து, மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குவதும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல உறவை வளர்ப்பதும் ஆகும்.
இந்த நாளில் உங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கு ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைங்க. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களைச் சிரிக்க வைங்க. அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து சிறிது நேரம் விலகி மகிழ்ச்சியாக இருங்க.
சரி வாங்க நாலு ஜோக்ஸ் படிச்சுட்டு ஹேப்பியா சிரிக்கலாம்.

கணவன்: wifeக்கு அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் (without information fighting everthing)
மனைவி : அட, அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க.. இப்படி.. "வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)
--
டாக்டர்: தினமும் உடற்பயிற்சி செய்கிறீர்களா?
நோயாளி: ஆமாம் டாக்டர்!
டாக்டர்: என்ன உடற்பயிற்சி?
நோயாளி: தினமும் காலையில் அலாரம் அடிக்கும்போது… அதை நிறுத்துறதுக்கு கையை நீட்டுறேன்!
--
தரகரே… என்கிட்ட நீங்க ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம மறைச்சிட்டீங்க
என்ன தம்பி சொல்றீங்க?
ஆமாங்க.. பெண் அஞ்சடி உயரம்னு சொன்னீங்களே.. மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே நீங்க!

கணவன் - நாய் கூட குடிக்குமா இந்த காபியை
மனைவி - நிஜம்தாங்க.. அதனால்தான் இதை உங்களுக்குக் கொடுத்துட்டு நாய்க்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்திருக்கேன்.
--
ஆசிரியர் - சார் உங்க பையன்தான் கிளாஸ்லேயே பர்ஸ்ட்
அப்பா- சூப்பர் டீச்சர்.. ரொம்ப சந்தோஷம்
ஆசிரியர் - நீங்க வேற.. மணி அடிச்சதும் முதல் ஆளா அவன்தான் வெளில ஓடுவான்.
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
கடல் ஒரு கவிதை!
{{comments.comment}}