சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் எழுப்பிய சுட்டிக்காட்டலைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவை முன்னிலையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் காரசாரம் :
சட்டமன்ற விவாதத்தின் போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், எதிர்கால ஆட்சி மாற்றம் குறித்தும் காட்டமாகப் பேசினார்.ஆட்சி மாற்றம் குறித்த பேச்சு: "மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வரும்; அதற்கு நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது" என்று பேரவையில் குறிப்பிட்டார்.
ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை:

"அப்பாவை காணோம் என்று சொல்கிறீர்கள்.. அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்க மாட்டீர்கள்; நாங்கள் இருப்போம்" என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.அமைச்சரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சர், திமுக தலைவரின் பெயரைப் குறிப்பிட்டுப் பேசிய விதம் சரியான நடைமுறை அல்ல என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவையில் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் விஜய் மன்னிப்பு :
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உடனடியாக குறுக்கிட்டுப் பேசினார்."திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான்" என்று ஒப்புக்கொண்டார். "அமைச்சர் சார்பாக நான் 'Sorry' கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.
சட்டசபை விவாதத்தின் போது பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பெயரை குறிப்பிட்டும் பேசினார். இதை திமுக உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியதால், அவையில் முன்னாள் முதல்வர் என்று தான் குறிப்பிட வேண்டும் என்ற மரபு உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட முதல்வர் விஜய், அது தவறு தான் என பதிலளித்ததுடன், அவருக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் பேசினார்.
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
{{comments.comment}}