கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!

Oct 05, 2026,10:42 AM IST

- அ.சுபாலட்சுமி


நண்பன் 1: என்ன செஞ்சிக்கிட்டு இருக்கடா?

நண்பன் 2: நான் என்ன செய்யப்போறேன்? கழுத கெட்டா குட்டிச் சுவரு. நான் வேலைதான் பாக்குறேன்டா.


இந்தப் பழமொழியைக் கேட்காதவர்களே இருக்க முடியாது இல்லையா. 


ஆனால் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழி, கழுதையின் தோல் நோய் மற்றும் அதன் இயற்கையான குணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கத்தைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா.. வாங்க தெரிஞ்சுக்கலாம். 


இந்தப் பழமொழியின் உண்மையான அர்த்தம்:




கழுதை கெட்டால்: கழுதையின் உடலில் அரிப்பு, காயம் அல்லது தோல் நோய் (புண்) ஏற்படும் நிலையைக் அதாவது 'தோல் கெட்டால்' என்பதை 'கழுதை கெட்டால்' என்று குறிப்பிடுகிறார்கள். 


குட்டிச்சுவர்: நல்ல மற்றும் உறுதியான சுவர்களை விட, சேதமடைந்த அல்லது பாழடைந்த சுவர்கள் (குட்டிச்சுவர்) மீது கழுதை தன் உடலைத் தேய்த்துக் கொள்ளும். 


காரணம்: நல்ல சுவர்களில் சொரசொரப்பு தன்மை இருக்காது. தோல் அரிப்பு தீரவேண்டி, சொரசொரப்பாக உள்ள குட்டிச்சுவர்களைக் கழுதை தேடிக்கண்டு பிடித்து அரிப்பைத் தணித்துக் கொள்ளும். 


அதாவது நமக்கு உடலில் எரிச்சல் அல்லது அரித்தால் விசிறிக் கம்பு வைத்து சில நேரம் சொறிந்து கொள்வோம் இல்லையா. அது போலத்தான் இதுவும்.


காலப்போக்கில் இந்தப் பழமொழியின் உண்மையான அர்த்தம் மருவி, ஒழுக்கமின்றித் திரியும் மனிதர்களைக் குறிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


ஆகவே கழுதை (தோல்) கெட்டால் குட்டி சுவர் தேடும் என்பது தான் உண்மையான பொருள்!


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்