- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
வறண்ட பூமி வானம் பார்த்துக் காத்திருக்கு .....
வாஞ்சையா ஒரு வார்த்தை தாராயோ முகிலே....
நஞ்சையும் புஞ்சையும் நாலு பக்கம் காஞ்சிருக்கு... .
நற்பயிர் விளைய நாலு தூரல் தூரலாமே....

உழைக்கும் உழவனின் நெஞ்சமும் கொஞ்சம் மகிழலாமே....
வெக்கையும் சற்று தணிய தண்மையும் தரலாமே....
வாயில்லா ஜீவன்களின் துயரும் எண்ணிப் பார்க்கலாமே...
வசந்தமும் இங்கு பூக்கவே வருகை புரியலாமே...
வானத்து நீரூற்றே வையகம் குளிர வருவாயா? ...
கோடையின் வெப்பத்தை வேரறுக்க வரம் தருவாயா?
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
மீண்டும் என் தந்தை!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
காலங்கள் மாறினாலும் நினைவுகள் மறைவதில்லை!
விருதுக்கும் மேலான அன்பு மடல்கள்!
நவராத்திரி ஸ்பெஷல் நெய்வேத்தியம்: நவதானிய சுண்டல்!
Folk Song: குடகு மலை தென்றலோடு வா நிலா!
உயிரின் உயிரே.. உனக்கோர் மடல்!
{{comments.comment}}