பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

Aug 20, 2026,04:53 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே


பாரெல்லாம் போற்றும்

குமரகுரு தாசா.......!


கந்தனின்  திருநாமம்

நெஞ்சினில் சுமந்தவரே


முருகனின் திருவருளை போற்றியே

வாழ்ந்தவரே......!


உள்ளமே உருகுதய்யா  சுவாமி 


குமரகுரு நேசா


பக்திபெருக்கினிலே

பெருந்தவம் செய்தவரே




பாம்பனின் புண்ணியரே......!


முருகனின் அருளாலே

தியானச்சுடரானாய்


அருளொளி பெருகிடவே

அடைக்கலம் நீயானாய்


சஸ்திர பந்தத்திலே

கருணை பொழிந்தவரே.....!


வேண்டும் வரம் அளித்து

வேலனின் உருவாக


வேல்வடிவில் காப்பவரே


பாம்பனின்

திருஉருவே 


பாம்பன் சுவாமிகளே.....!


அன்பெனும் ஆலயத்துள் அகமகிழ்ந்து அருள்வாயே


இதயத்தில் மலர்ந்தாயே  சுவாமி 


ஆதரித்தருள்வாயே.....!


பாம்பன் சுவாமிகளே

பொற்பாதம் சரணடைந்தோம்


சங்கடங்கள் தீர்ந்திடவே தயைபுரிந்தருள் சுவாமி......!


திருவடி தேடிவந்தோம்

மனக்குறை போக்கிடவே


ஞானமும்  தந்திடுவாய்


ஷண்முகவடிவாக சாந்தியருள் தேவா.....!


கந்தனின் கருணை பெற்று காருண்யமானவரே


சிந்தை நிறைந்தவரே

சீர்மிகு குருநாதா


அல்லல் போக்கிடவே

அபயமளித்திடுவாய்...!


வள்ளல் பெருமானே

வரம் நீ தந்திடவா.....!


பாம்பன் சுவாமிகளே

பக்தியின் பெருங்கடலே......!


பாம்பன் சுவாமிகளே

பக்தியின் பெருங்கடலே.....!


ஆதரித்தருள்வாயே.....!


ஓம் முருகா சரணம்.....!


வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.......!


சக்திவேல் முருகனுக்கு அரோகஹரா.....!


ஞானவேல் முருகனுக்கு 

அரோகஹரா....! 


ஓம் முருகா சரணம்.....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்