- சுதா திருநாராயணன்
சம்யுக்தா மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் அதே சமயம் மனதின் ஒரு ஓரத்தில் உறுத்தலும் இருந்தது. இன்று ஆகாஷுடன் போட்டிங் பிக்னிக், பிச்சாவரம் வனப்பகுதியில் செல்ல வேண்டும்.
வீணை வித்தகியான அவள் இன்று ஒரு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டிருந்தாள். ஆகாஷ் வற்புறுத்தியதால் அதை ரத்து செய்தாள். இதற்கு சம்யுக்தாவின் தாயும் உடந்தை. "நாளைக்கு மாப்பிள்ளையா வரப்போறவன் தானே போயிட்டு வாயேன்" ஆகாஷ் சம்யுக்தாவின் வீணை இசையை ரசிக்கவில்லை என்பதுடன் அது அவனுக்கு பிடிக்கவும் இல்லை என்பதை சம்யுக்தா உணர்ந்திருந்தாள்.
சங்கீத ரசனை இல்லாதவனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி அவள் மனதில் அடிக்கடி எழுந்து கொண்டிருந்தது. தாயிடம் கூறினாள். "அம்மா நான் ஒரு வளர்ந்துவரும் ஆர்டிஸ்ட், எனக்குப் பாராட்டை விட என்கரேஜ்மெண்ட் ரொம்ப முக்கியம். அது இல்லாத ஒரு குடும்பத்துல போய் நான் வாழ்க்கை படணுமா? அவர்களுக்கு என்ன விட, என் சங்கீதத்தை விட, என்னுடைய ஐடி சம்பளம்தான் ரொம்ப முக்கியமா இருக்கு. போன வாரம் என்னோட கச்சேரிக்கு வந்துட்டு ஆகாஷ் அம்மா போன் பேசிட்டே இருந்தாங்க, ஆகாஷ் பத்து நிமிஷத்துல எழுந்து வெளியில் போய் விட்டான். இது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது ? "
சம்யுக்தாவின் தாய் சமாதானமாக கூறினாள். "அதெல்லாம் போகப்போக சரியாயிடும் உன்ன கச்சேரி பண்ணக்கூடாது, போகக்கூடாது, அதெல்லாம் சொல்லல இல்லியா?"
அம்மாவிற்கு எப்படி புரியவைப்பது என்று சம்யுக்தாவிற்கு தெரியவில்லை. பொருந்தா திருமணம் போராட்டமாகவே இருக்கும். "அம்மா நீ ஆகாஷ் வீட்டு பணத்தை பார்க்கிற. அங்க வெச்சிருக்கற ரெண்டு கார பாக்குற. அந்தக் கார் லோன் கட்டுவதற்கு அவங்க என்னோட சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள். ஒரு கச்சேரிக்கு எவ்வளவு பணம் கொடுப்பார்கள் அப்படின்னு தான் ஆகாஷ் என்கிட்ட முதல் பேச்சை பேசினான் ".

"நீ ரொம்ப அநாவசியமா யோசிக்கிற " என்றாள் சம்யுக்தாவின் தாய்.
"நான் இன்னிக்கு பிக்னிக் போயிட்டு வந்த அப்புறம் என்ன முடிவு பண்ணனும் என்று எனக்குத் தெரியும் " தீர்மானமாக கூறினாள் சம்யுக்தா.
ஆகாஷுடன் காரில் புறப்பட்டு பிச்சாவரம் சென்றாள். அங்கே ஆகாஷின் நண்பர்களை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள். "ஆகாஷ், ஃப்ரெண்ட்ஸ் வரப்போறாங்க என்று சொல்லவே இல்ல நீ" என்றாள் சம்யுக்தா.
"எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கணும்னு அவசியமே இல்லை " அலட்சியமாக பதில் வந்தது ஆகாஷிடம் இருந்து. எல்லோருமாக போட்டில் ஏறினர். என்னென்னவோ நொறுக்குத்தீனி சிப்ஸ் கூச்சல் கும்மாளம். தனியாக ஆகாஷிடம் பேசலாம் என்று நினைத்த சம்யுக்தாவிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நண்பர்களின் பேச்சும் அவர்களிடமிருந்து வந்த லேசாக மது வாடையும் மிகவும் அருவருப்பாக இருந்தது சம்யுக்தாவிற்கு. படகை ஒட்டிய இளைஞன் மிகவும் கண்ணியமாக இருந்தான். சம்யுக்தாவை இரண்டு மூன்று முறை மரியாதையுடன் திரும்பித் திரும்பிப் பார்த்தான். சம்யுக்தா அதிகம் யாருடனும் பேசவில்லை. ஆகாஷிடம் தலை வலிப்பதாக கூறி சீக்கிரமாக வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். அவனும் மறுப்பேதும் சொல்லாமல் படகை கரைக்கு திரும்ப சொன்னான்.
"ஜாலியா இருக்க தெரியலையே உனக்கு " என்று சம்யுக்தாவை பார்த்து கூறினான்.
சம்யுக்தா பதில் எதுவும் சொல்லவில்லை. மௌனமாக கரையேறினாள். படகிலிருந்து இறங்கிய பின் படகை ஓட்டிய அந்த இளைஞன் அவளருகில் வந்தான். "மேடம், போன வெள்ளிக்கிழமை மேகலா ஹால்ல நீங்க தானே வீணைக் கச்சேரி பண்ணினீங்க. ரொம்ப நல்லாயிருந்தது. எனக்கு மியூசிக்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் உண்டு.நான் வயலின் கத்துக்கறேன். இது எங்க சொந்த போட். இங்க வரும் போது இதுவும் செய்வேன். நைஸ் டு மீட் யு " என்றான் பணிவுடன். சம்யுக்தாவின் உள்ளத்தில் ஒரு சின்ன புயல் அடித்தது. மனதின் மாற்றத்தை தாயுடன் பகிர்ந்துகொள்ள விரைந்து ஓடினாள்.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
சரியான முடிவு
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
விடுதலை!
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
நானாக என்னிடம் எதுவுமில்லை இப்போது!
புலரும் காலைப்பொழுதினிலே
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
{{comments.comment}}