- கவிஞர் பி.எஸ். முருகேசன்
கொலுசு சத்தம்
சல சலக்க
கூந்தல் மலர்
மணமணக்க
காந்தவிழி பார்வையிலே
கன்னியும் வந்தாள்
கலர் கலராய்
புடவையிலே மின்னியும் வந்தாள்
ஒத்த கல்லு மூக்குத்தியும்
ஒளிர விட்டு மூக்குல தான்
நாணல் போல உயரமாக
நங்கையும் நின்றாள்
நாணத்தோட மொகத்துலயும் புன்னகை தந்தாள்

பாத்து பாத்து
ஆசை அள்ள
பரவசத்தில் மீசை துள்ள
ஓசை இன்றி
ஆடவனும் ஓடியும் வந்தான்
கண் அசைவில்
காதல் வலை வீசியும் நின்றான்
கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ள
காதல் மனம்
ஆசை கொள்ள
காந்தம் போல
காதல் வானில்
சிறகடித்து பறந்து சென்றது
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}