நிலவின் கவிதை!

Su.tha Arivalagan
Apr 25, 2026,02:44 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


நிலாப்பெண்ணே

உனைப் பார்த்து 

சிலையானேன் நேற்று 


கண்ணே உனைப் பார்த்து

கவி வடிப்பேன் காதல் சேர்த்து


எத்தனை கவிஞர் என்னை பெண் என்று அழைத்தாலும்

ஒத்துக்கொள்ள மறுக்கிறேனே....


அந்தி வானில் 

உன்னை பார்க்கும் போது




உந்தன் கையில் 

என்னை கொண்டு 


உலா போகும்

நிலா பெண்ணே


மாலை நேர பொழுதெல்லாம்


உன் அழகில் மயங்கி 


காதலித்து காதலித்து 


புதுக்கவிதை செய்வோம்


சந்திரனாய் நானும்


மதியாய் நீயும் ....


கண்ணில் நூறு 

காதல் பேசும்


எந்தன் ஆசை 

நிலா பெண்ணே!


காலம் நேரம் மறவாமல் 


நிலவே முகம் காட்டு!


காத்திருப்பேன் உனை எதிர்பார்த்து!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).