கொண்டாட்டமாம் கொண்டாட்டம்.. குடியரசு தின விழா!

Su.tha Arivalagan
Jan 26, 2026,12:00 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


கொண்டாட்டமாம் கொண்டாட்டம்

குடியரசு கொண்டாட்டம்....

இன்று கோலாகலக் கொண்டாட்டம்...


நம் நாட்டின் தேசத்தலைவர்களாய்...

மயக்கும் மழலைக்கிள்ளைகள்...

மாறுவேடம் பூண்டனர்!




தேசியக் கொடி பறக்கவே..

கொடிப் பாடல் ஒலிக்கவே..

மூவர்ணக் கொடிக்கு

முதல் வணக்கம் செலுத்தினர்.


தாய்நாட்டைக் காக்கவே

தன் இன்னுயிரை ஈந்திய 

தலைவர்கள் தியாகம் போற்றினர்!


கொண்டாட்டமாம் கொண்டாட்டம்

குடியரசு கொண்டாட்டம்....

இன்று கோலாகலக் கொண்டாட்டம்...


அழகு குட்டி செல்லங்கள்

ஆடிப்பாடி மகிழ்ந்தனர்!

பாரதியின் பாடலை

பாடிப் பாடி திளைத்தனர்!


இன்ப வெள்ளம் பொங்கிட..

இனிய வாழ்த்து சொல்லியே...

இனிப்பு உண்டு மகிழ்ந்தனர்...


கொண்டாட்டமாம் கொண்டாட்டம்

குடியரசு கொண்டாட்டம்....

இன்று கோலாகலக் கொண்டாட்டம்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).