சுதந்திர இந்தியா குடியரசு நாடாக மாறிய வரலாறு!

Jan 26, 2026,11:21 AM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறிய போதிலும், ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் அது தன்னை ஒரு இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அறிவித்தது. இப்படி சிறப்பு வாய்ந்த குடியரசு தினத்தைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.


1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும், சிற்றூர்களிலும், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.


"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."


12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.




பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.


அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் ஜனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


முதல் குடியரசு தலைவர்:


குடியரசு தின நாளில் 21 துப்பாக்கிகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டதும், டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதும் இந்தியக் குடியரசின் வரலாற்றுச் சிறப்பாகும். அதன் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, இந்தியக் குடியரசு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய குடிமக்களுக்குத் தாங்களே அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கியது.மேலும் ஜனநாயகத்திற்கு வழி வகுத்தது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.


குடியரசு பெயர்க் காரணம்:


குடியரசு' (Republic) என்ற கருத்தாக்கம் பண்டைய ரோமில் (Rome) 'res publica' (பொது விஷயம்) என்ற லத்தீன் சொற்றொடரிலிருந்து உருவானது.மேலும் நவீன காலத்தில் பிரான்ஸ் (French Revolution) மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் அரசாங்க வடிவம் வலுப்பெற்று, உலகெங்கிலும் பின்பற்றப்பட்டது. மன்னராட்சி நீக்கப்பட்ட பின் 6ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் 'res publica' என்ற அரசாங்க முறை உருவானது. இதுவே குடியரசு என்ற கருத்தின் ஆரம்ப வடிவம் ஆகும்.


பண்டைய ரோமானிய குடியரசின் அரசியலமைப்பைக் குறிக்கும் வகையில் இந்த வார்த்தை அதன் நவீன அர்த்தத்தை உருவாக்கியது.இது கிமு 509 இல் மன்னர்கள் தூக்கியெறியப்பட்டது முதல் கிமு 27 இல் பேரரசு ஸ்தாபித்தல் வரை நீடித்து காணப்பட்டது.


குடியரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், வாரிசுரிமை மன்னராட்சி இன்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் அரசாங்க முறை ஆகும். இதில் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலைவரைத் தேர்ந்தெடுத்து, பொதுவான கொள்கைகளின் கீழ் நாட்டை நடத்துவார்கள்.இது "மக்களாட்சி" (Democracy) மற்றும் "குடியரசு" (Republic) ஆகிய இரண்டின் கலவையாகும். 


லைவர் பரம்பரை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படாமல், மக்களால் (நேரடியாகவோ/மறைமுகமாகவோ) தேர்ந்தெடுக்கப்படுபவர். இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு நாடாகும்.


குடியரசாக மாறிய இந்தியா:


1792ல் பிரெஞ்சுப் புரட்சியின் போது, பிரான்ஸ் முதல் நவீன குடியரசுகளில் ஒன்றாக உருவெடுத்தது. அமெரிக்கப் புரட்சியும் குடியரசுக் கொள்கைகளுக்கு வலுவூட்டியது.


இந்தியா 1950ல் குடியரசாக மாறியது. ஆனால் இந்தக் கருத்தின் வேர்கள் பண்டைய ரோம் மற்றும் நவீன ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்தைக் கொண்டவையாக காணப்பட்டது.


குடியரசு தலைவர்:


தற்காலக் குடியரசுகளில் அதன் தலைவர் குடியரசுத் தலைவர் அல்லது ஜனாதிபதி எனப்படுவார். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் குடியரசுகளில், குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.


குடியரசுகளிலும், நாட்டுத் தலைவரே அரசுத் தலைவராகவும் இருப்பதில்லை. இவ்வாறான நாடுகளில் அரசுத் தலைவர் பிரதம அமைச்சர், பிரதம மந்திரி அல்லது பிரதமர் என அழைக்கப்படுவார். அரசின் கொள்கைகளையும், அரசையும் மேலாண்மை செய்யும் பொறுப்பு பிரதம அமைச்சருக்கு உரியது. சில நாடுகளில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் தேர்வதற்கான விதிகள், அவ்விருவரும் வேறுவேறான கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் இடமளிக்கின்றன. பிரான்சில், ஆட்சியிலிருக்கும் அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை "ஒத்துவாழ்தல்" (cohabitation) எனப்படுகிறது.


ஜெர்மனி, இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும். சில குடியரசுகளில், நாட்டுத் தலைவருக்கு சில அம்சங்களில் மன்னர்களை ஒத்த அதிகாரங்கள் இருப்பதும் உண்டு. சில குடியரசுகள், நாட்டுத் தலைவரை அவர் வாழும் காலம் வரைக்கும் பதவியில் இருத்துவது மட்டுமன்றி, வழமையான ஜனநாயக அமைப்பில் இருப்பதிலும் பார்க்க, கூடிய அதிகாரங்களை அவருக்கு அளிக்கின்றன. சிறிய அரபுக் குடியரசு இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.


தேசியத் தலைநகரில் குடியரசு தின நிகழ்வுகள் :




நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.


கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.


மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.


குடியரசு தினம் என்பது வெறும் ஒரு தேசிய கொண்டாட்டம் மட்டுமல்ல - நமது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாற்றிய தினமாகும். நம்மை வரையறுக்கும் கொள்கைகளை மதிக்கவும், நாம் தொடர்ந்து இணைந்து செய்யும் முன்னேற்றத்தைக் கொண்டாடவும் இது ஒரு தருணமாகும்.


குடிமக்களாகிய  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்கள் ,தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் செய்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாயின் மணிக்கொடி பாரீர்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்.. குடியரசு தின விழா!

news

சோழர் காலத்தில் செழித்தோங்கிய மக்களாட்சி.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடவோலை முறை!

news

சுதந்திர இந்தியா குடியரசு நாடாக மாறிய வரலாறு!

news

4வது முறையாக தேசியக் கொடியேற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

news

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்.. தேசத்தை வழிநடத்திய ஆளுமைகள்.. ஒரு பார்வை!

news

77வது குடியரசு தினம்.. டெல்லியில் விழாக்கோலம்.. கடமைப் பாதையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்