- எம். பாரதி
தாயின் கருவறையில் தொடங்கிய பயணம்
பெற்றோர், சொந்த பந்தங்களின்
கரங்களில் தவழ்ந்த பயணம்
குதூகலமாக துள்ளித் திரிந்த பள்ளிப் பயணம்
கற்பனையோடு கடந்த கல்லூரிப் பயணம்
கடமையோடு பயணிக்கும் பணி பயணம்
கனவுகளோடு நுழைந்த திருமணப் பயணம்
பொறுப்புகளோடு பயணிக்கும் பெற்றோர் பயணம்
கதை சொல்லி அடுத்த தலைமுறையுடன் பயணம்
பணி நிறைவு பாராட்டி பணி நிறைவு பயணம்

வாழ்க்கையின் பயணத்தை பயணிக்கிறோம்
இறுதி பயணம் எப்பொழுது, எவ்வாறு என்று அறியாமலே...
கடந்த பாதையில் இழந்தவை ஏராளம்,
எதிர்வரும் பாதையில் எஞ்சியது தாராளம்
வாடிய போதும் சிரிப்பைப் பகிர்ந்து,
தேடிய யாவையும் இங்கேயே விடுத்து
பயணத்தின் முடிவை விட,
பயணிக்கும் வழியில் இன்பம் காண்போம்
உறவுகளின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே,
அந்த மௌனப் பயணத்தையும்
புன்னகையோடு வரவேற்போம்!
(M.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)
மழை நின்ற பின்பும் தூறல் போல
ஆனந்த கானம் பாடுகிறாய்!
இன்சொல் பேசுவோம்.. இதயம் என்றென்றும் இளமையாக வாழும்!
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
{{comments.comment}}