அன்பு...!

Mar 13, 2026,11:17 AM IST

- பா. பானுமதி


அலட்சியம் செய்தாலும் 

அரவணைக்க தவிக்கும் 

எடுத்து எறிந்தாலும்

ஏற்று கொள்ள துடிக்கும் 

கசக்கி விட்டாலும் கரிசனம் காட்டும் 

வலிகள் கொடுத்தாலும் வழிகாட்டி உயர்த்தும் 

அடிகள் வாங்கினாலும் ஆதரவு கொள்ளும்

வெட்டி சாய்த்தாலும் வேர் மறுபடி துளிரும்


கட்டிக்கொண்டால் கரைந்து போகும் 

ரணமாக்கினாலும் குணமாகி மனம் விட்டு போகாது 

பொய்கள் எல்லாம் பூவாய் நினைக்கும் 

மெய்யாக இருந்தால் மேனி சிலிர்க்கும் 

எவ்வளவு சுட்டாலும் தங்கமாய் ஜொலிக்கும் 

என்ன தான் திட்டினாலும் வைரமாய் மின்னும் 




மின்சாரமாய் தாக்கினாலும் பொன்னாரமாய் ஒளிரும் 

ஆயுதம் காட்டினாலும் அச்சமின்றி ஆட்கொள்ளும்

எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி ஏணியில் ஏற்றிடும்

தனக்கென வாழாமல் உனக்கென உருகும் 

உண்மையான அன்பு ஆண்டவன் ஆசீர்வாதம் அன்றோ...

அன்பை உணராமல் அலட்சியம் செய்தாலும் அவர்

அடி பணியும் அன்பு என்ன சொல்ல

அன்பும் ஒரு அறியாமையோ...? 


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்