ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை

Jul 28, 2026,04:46 PM IST

டெல்லி: நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், சமீபத்தில் நடைபெற்ற ஜென் Z இளைஞர்களின் போராட்டங்களை விமர்சித்து வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 


இளைஞர்களை மாபெரும் சாக்கடைகள் என்று கங்கனா விமர்சித்துள்ளதற்குக் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.


டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களின்போது பயன்படுத்தப்பட்ட கோஷங்கள், பதாகைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கங்கனா, போராட்டக்காரர்களின் மொழி மற்றும் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்தார். 




தனது சமூக ஊடக பதிவில், போராட்டங்களில் இடம்பெற்ற வீடியோக்களை "அருவருப்பை ஏற்படுத்துபவை" என்று குறிப்பிட்ட அவர், போராட்டக்காரர்களின் வளர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும், சில இளைஞர்களை, குறிப்பாக போராட்டங்களில் பங்கேற்ற இளம் பெண்களைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.


கங்கனாவின் இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன. பலர் அவரது கருத்துக்களை பெண்களையும் இளைஞர்களையும் இழிவுபடுத்துவதாகக் கண்டித்துள்ளனர். மறுபுறம், சிலர் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஆபாசமான மொழியை சுட்டிக்காட்டி அவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்