சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேருந்து பயணத்தை மேற்கொள்ள புதிய வழிகாட்டுதல்களையும் விதிகளையும் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
செல்போனில் சத்தமாக பேசவும், பாடல்கள் கேட்கவும் தடை :
அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் போது, சக பயணிகளின் அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பயணிகள் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கையடக்கப்பேசியில் (செல்போன்) அதிக சத்தத்துடன் பேசுவதையோ அல்லது ஸ்பீக்கர் (Speaker Mode) மூலம் சத்தமாக பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்குவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இயர்போன் / ஹெட்ஃபோன் பயன்படுத்த அறிவுரை

பேருந்து பயணத்தின் போது பாடல்கள் கேட்பதற்கோ அல்லது வீடியோக்களை பார்ப்பதற்கோ பயணிகள் கட்டாயமாக 'இயர்போன்' (Earphone) அல்லது 'ஹெட்ஃபோன்' (Headphone) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஸ்பீக்கர் மோடில் வீடியோக்களையோ, பாடல்களையோ இயக்குவது அருகில் பயணம் செய்யும் மற்ற பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பிற பயணிகளின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் மதிக்கும் வகையில் இயர்போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவு
இந்த புதிய நடைமுறை குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 24 செ.மீ நீளமும் 16 செ.மீ அகலமும் கொண்ட பிரத்யேக விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயார் செய்யப்பட்டு அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் (Conductors) மற்றும் மேற்பார்வையாளர்கள் பயணிகளிடம் இந்த கட்டுப்பாடுகளையும் புதிய நடைமுறைகளையும் கட்டாயமாக எடுத்துக்கூறி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது.
"அமைதியான பயணம் - பாதுகாப்பான பயணம்"
பயணிகள் அனைவரும் இந்த விதிகளை முறையாகப் பின்பற்றி, அரசுப் பேருந்துகளில் "அமைதியான பயணம் - பாதுகாப்பான பயணம்" அமைந்திட முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
{{comments.comment}}