- கவிதா அறிவழகன்
தூணாய் நின்றேன், கல்லாய் நிலைத்தேன்,
மதில் சுவராயும் இருந்தேன்,
வீசும் புயலிலும், காற்றிலும் வீழாது நின்றேன்,
நீண்டு வளைந்து செல்லும் கங்கையும் தன் பயணத்தின் இறுதியில்,
அமைதி கொள்ளும் ஒரு புகலிடத்தைத் தேடுகின்றாள்.
ஒளியின் நிழலை நோக்கி என் சிரசைச் சாய்க்கின்றேன்,
நடுநிசியில் எனக்காய் காத்திருக்கும் அந்தத் தோளில்,
மண்ணும் களிமண்ணும் சார்ந்த உயிரல்ல அவர்,
என்றும் பிரியாத தூய ஆவியானவர்.

பயணம் என் ஆண்டுகளையும் பெருமையையும் விழுங்கியது,
இருப்பினும் ரகசியங்கள்
உறங்கும் இடத்தைச் சேரவில்லை,
ஈரம் காயாத மை படிந்த அந்தப் பக்கங்களில்,
நான் மறக்க இயலாத அந்தத் தோள் இன்றும் உளது.
ஆத்துமாவே! அமைதி கொள், கடன்கள் அனைத்தும் தீர்ந்தது,
கவிதைப் பூஞ்சோலையின் குளிர் நிழலில் இளைப்பாறு.
தூயவர் மேல் சாய்ந்துவிடு, உலகம் கடந்து போகட்டும்,
விண்ணாளும் மன்னவனின் கரம் நீ பிடித்துக்கொண்டாய், அல்லவா!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
An Empty Wallet.. காலியான பணப்பை!
{{comments.comment}}