வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருமார்களைப் போற்றுவோம்.. குரு பூர்ணிமா சிறப்புகள்

Jul 29, 2026,12:11 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 ஜூலை மாதம் தேதி, ஆடி மாதம் 13ம் நாள்,புதன்கிழமை யான இன்று பௌர்ணமி அமைந்துள்ளது மிகவும் விசேஷமாகும். ஆடி மாதம் அமைந்துள்ள பௌர்ணமி "குரு பூர்ணிமா" என்று அழைக்கப்படுகிறது.


குரு பூர்ணிமா என்பது ஆசிரியர்களையும், நம் வாழ்வில் வழிகாட்டுதலாக இருந்த குருமார்களையும் போற்றும் ஒரு புனிதமான நாளாகும். இந்து நாட்காட்டியில் ஆஷாட மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் அமைந்துள்ள இந்த பௌர்ணமி நாளில் நமக்கு கல்வி மற்றும் ஆன்மீக அறிவைச் சொல்லித் தந்த குருமார்களுக்கு மாணவர்கள் நன்றி செலுத்தும் நாளாக அமைந்துள்ளது.


நேரம்:


பௌர்ணமி திதியானது ஜூலை மாதம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:18 மணிக்கு தொடங்கி ஜூலை மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8:05 மணிக்கு நிறைவடைகிறது.


குரு   -  பொருள்:




தமிழில் குரு என்ற சொல்லுக்கு ஆசிரியர், ஆசான், வழிகாட்டி என்றும் "கு "என்றால் இருள் என்றும் "ரு” என்றால் போக்குபவர் என்றும் பொருள் கொண்டு,அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் தருபவர் குரு என்று அழைக்கப்படுகிறார்.  


மனத்தில்  உள்ள அறியாமை, பேராசை போன்றவற்றை அழித்து ஞானத்தை அளிப்பவர் குரு. தெய்வத்திற்கு இணையானவர் ஒரு குருவே சிவம், குருவே தெய்வம் கடவுளுக்கும் நமக்கும் இடையே இருந்து நற்கதியை  அளிப்பவர்.குருவின் திருவடிகளை வணங்குவதே முழுமையான ஞானத்தையும் நிம்மதியான வாழ்க்கையையும் தரும். 


சிறப்புகள்:


ஆதி குரு நிகழ்வு :


யோக கலையில் சிவன் தனது முதல் சீடரான சப்தரிஷிகளுக்கு ஞானத்தை வழங்க தொடங்கிய நாளாகவும் இந்த குரு பூர்ணிமா கருதப்படுகிறது.


வியாசர் பிறப்பு :


நான்கு வேதங்களை வகுத்தளித்த வேதவியாசர் பிறந்த நாள் இந்த நாள் என்பதால், இந்த நாளை "வியாசபூர்ணிமா" என்றும் அழைக்கப்படுகிறது. 


பிற மதங்கள் :


பௌத்த மதத்தில் புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்கிய நாளாகவும்,சமண மதத்தில் மகாவீரர் தனது முதல் சீடரை ஏற்ற  நாளாகவும்   இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


குருவின் வகைகள்:


சிக்ஷா குரு  (shiksha guru):


நம் வாழ்வில் தேவையான கல்வி, கலை மற்றும் உலகியல் அறிவை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் இவர்.


தீட்சை குரு  (Diksha guru):


ஆன்மீகப் பாதையில் அழைத்துச் சென்று மந்திரம் அல்லது தீட்சை வழங்கி தனது சீடனாக  ஏற்றுக் கொள்ளும் ஆன்மீக வழிகாட்டி இவர்.


சத்குரு  (Sadguru ):


சீடனின் அறியாமையை முழுமையாக நீக்கி இறை உணர்வை பெற்றுத்தந்து முக்திக்கு வழி நடத்தும் மிக உயர்ந்த நிலை குரு இவர்.


வழிபாடு:


நம் வாழ்வில் கல்வி, கலை, இசை கற்றுக் கொடுக்கும் குருமார்களுக்கு மற்றும்  ஆன்மீக வழிகாட்டியாக விளங்கும் குருமார்களின் பாதங்களை சிறப்பு பூஜை செய்தல் நன்று.


தியானம் செய்தல், நல்ல செயல்களில் ஈடுபடுதல், மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தல், ஏழை குழந்தைகளுக்கு படிப்பதற்காக தங்களால் இயன்ற உதவியை செய்தல், அவர்களுக்கு பென்சில்,பேனா, நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்தல், அன்னதானம் செய்தல் சிறப்பு.


திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தல் முக்தி அளிக்கும். ஆடி மாத பௌர்ணமியில் குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது சிறப்பு. கோவில்களிலும்,சிலர் வீடுகளில் சத்ய நாராயண பூஜை இந்த  முழு நிலவு நாளில் செய்வது சிறப்பு.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உன் ஞாபகங்கள் வலிக்கின்றது!

news

வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருமார்களைப் போற்றுவோம்.. குரு பூர்ணிமா சிறப்புகள்

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

news

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

news

பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை

news

ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!

அதிகம் பார்க்கும் செய்திகள்