- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்
நகை என்பது அலங்காரம் மட்டுமல்ல. நம் நாட்டின் பாரம்பரியம்
தலைப்பைக் கேட்டதும் நகையை வாங்க போகிறோமோ என்று எண்ணம் வருகிறதா? தேசிய நகை தினத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேசிய நகை தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நகைகளின் அழகு மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நாளாக கருதப்படுகிறது. நகைகள் மனிதர்களின் அலங்காரத்தின் முக்கிய பகுதியாகும். பழங்காலம் முதல் நகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வைரம் போன்றவற்றால் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
நகைகள் பெண்களின் அழகை அதிகரிக்க உதவுகின்றன. சிலர் நகைகளை முதலீடாகவும் வைத்திருக்கிறார்கள்.
திருமணம் மற்றும் விழாக்களில் நகைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் நகைகளின் வடிவமைப்பு வேறுபடுகிறது. நகை தயாரிப்பு ஒரு சிறந்த கைவினை கலை ஆகும். நகை வடிவமைப்பாளர்கள் புதிய வடிவங்களை உருவாக்குகிறார்கள்.

பாரம்பரிய நகைகள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சில நகைகள் குடும்ப பாரம்பரியமாக தலைமுறைகளுக்கு பரிமாறப்படுகின்றன. நகைத் தொழில் பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. நகைகளை அணிவது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ,சிறந்த முதலீடாகவும் இருக்கிறது. இன்றைய நாளில் நகைகளின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்வோம்.
நிறைய மக்கள் தங்கம் தான் நகை என்று எண்ணி அவற்றையே அணிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். வெள்ளி நகையும் நமது பாரம்பரியம் தான் என்பதை மறந்து விடுகிறார்கள். தங்கத்தைப் போல் வெள்ளி நகை அணிவது உடல் நலத்திற்கு நல்லது தான் என்பதை உணர்ந்து வெள்ளி நகைகளை அணிந்து கொள்ளுங்கள்.
ஆண்களும் கட்டாயம் வெள்ளி நகைகளை அணிய வேண்டும் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களில் வெள்ளி நகைகளை அணிந்து கொள்ளுங்கள். வெள்ளி, முத்து போன்ற நகைகளை வாங்கி அணிந்து கொள்ளலாம். இதுவும் நமக்கு அழகாக தான் இருக்கும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் நமது வசதிக்கு ஏற்ப நம்மால் முடிந்தவற்றை வாங்கி அணிந்து கொள்வோம்.
நகைகள் அழகுக்கும் செல்வத்திற்கும் அடையாளமாக கருதப்படுகின்றன. நகை கலைஞர்களின் திறமையை பாராட்டும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}