நண்பேண்டா.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

Su.tha Arivalagan
Jun 29, 2026,12:07 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


மதிப்பெண் அடிப்படையில் பிரித்துப் பார்த்து பரிசு கொடுப்பது எனக்கு பழக்கம் இல்லை. எங்கள் பள்ளியில் சக ஆசிரியர் ஒருவர் அன்பின் மிகுதியால் அனைத்து வகுப்புகளிலும் இரண்டாம் பருவத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வாங்கிக் கொடுத்தார்.


என் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு அதை அணிவித்து  புகைப்பபடம் எடுத்துவிட்டு அமரச் செய்தேன்.


மூன்றாம் மதிப்பெண் எடுத்த தருண்,, அவனுடன் குழுவாக மேசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நீ போட்டுக்கோடா, நீயும் போட்டுக்கோடா என்று  பதக்கத்தை அணிவித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். 


தருணின் இந்த பண்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது.


தருணின் இச்செயலைக் கண்ட மற்ற இரண்டு மாணவர்களும் தருணைப் போலவே மற்ற மாணவர்களுக்கு அணிவித்து அழகு பார்த்தனர்.




என்ன வியப்பு !


மூவரும் சேர்ந்து வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அந்த  பதக்கங்களைப் போட்டு போட்டு அழகு பார்த்துவிட்டனர்.


அடிதடினு அட்டகாசம் பண்ணுவாய்ங்க..இப்போ என்னடான்னா... இவ்வளவு நல்லவங்களா மாறிட்டாங்களே... இருக்கட்டும்.. இருக்கட்டும் னு வாயடைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்...


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று சும்மாவா சொன்னார்கள்.,.


என் மாணவச் செல்வங்களின் இச்செயல், அவர்களின் ஆசிரியராக என்னைப் பெருமை அடையச் செய்தது....


அட்டகாசம் தொடரும்...


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).