இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

Jun 22, 2026,05:12 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


அறிவியல் பாடத்தில் விருந்துக்கு வாங்க என்ற ஒரு செயல்பாடு...

நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த செயல்பாடு...

உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் செயல்பாடு ...


முதல் நாளே மாணவர்கள் யார் யார் என்ன உணவுப் பொருட்கள் கொண்டு வரப் போகிறார்கள் என்று கூறி விட்டார்கள்... அதேபோல் ஆளுக்கு ஒரு அயிட்டம் எடுத்து வந்தார்கள்...


தலை வாழை இலையும் ரெடி....




முதலில் உணவுப் பொருட்களின் படங்களை வாழை இலையில் விருந்து போன்று படைத்துவிட்டு எதில் எதில் எந்த சத்து இருக்கிறது என்று கற்றுக் கொடுத்தேன்...


இப்போது வாழை இலையில் மாணவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களைப் பரிமாற ஆரம்பித்து விட்டோம்....




மாணவர்களை அவர்கள்  கொண்டு வந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் பற்றி கூறச் செய்து விட்டு...

மாணவர்களுக்கு ஊட்டி விட்டேன்...


அனைவரும் என்னைத் தாயாக ஏற்றுக் கொண்ட தருணம்...


மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக சாப்பிட்டார்கள்...


திடீரென்று ஒரு மாணவன்... இன்னிக்கு ஒரு பிடி... என்று உரக்கக் கத்தினான்...


ஒரே சிரிப்பலை வகுப்பில்....


அட்டகாசம் தொடரும்...


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்