மிஸ்‌.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

Jun 20, 2026,03:50 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


ஆண்டுவிழா நேரம். எனக்கு சற்று வேலைப்பளு அதிகம். மாணவர்களிடம்‌ ஆண்டுவிழாவிற்கு நாடகம் போடலாம் என்று கூறியிருந்தேன்...‌‌


நான் வகுப்பிற்குள் நுழையும் போதெல்லாம் நாடகம் நாடகம் என்று நச்சரித்தார்கள்...


தமிழில் கண்ணகி நாடகம் போடலாமா என்று கேட்டேன்.., ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் அந்தப் பாடம் இருப்பதால்....மிஸ் நாங்களே படிச்சுக்கிறோம்... உங்களைத் தொல்லை பண்ண மாட்டோம் என்றார்கள் சின்ன வாண்டுகள்....


மறுநாள் 

வகுப்பிற்குள் நுழைந்ததுமே....மிஸ் நாடகம் ரெடி என்றார்கள்....

யார்..யார்... என்ன கதாபாத்திரம் என்றும் என்னிடம் கூறினார்கள்.....

யோகிணி_கண்ணகி

வசுமிதா_பாண்டிய மன்னன்

தர்ஷன்_வாயிற்காவலன்

கீர்த்தி _பாண்டிமாதேவி




நடித்துக் காட்டட்டுமா என்றும் கூறினார்கள்...சரி என்றேன்....


நான் எதிர்பார்க்கவேயில்லை...என் மாணவச் செல்வங்கள், அவ்வளவு அழகாக...சத்தமாக... உணர்ச்சிப் பெருக்குடன்‌ டயலாக் பேசி...மாஸ் பண்ணி விட்டார்கள்...


என்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து.... ராஜாவுக்கும்,ராணிக்கும் கிரீடம் செய்யுங்கள்....செங்கொல் ஒன்று,சிலம்பு ஒன்று செய்து கொள்ளும்படி கூறினேன்...


அதையும் நேர்த்தியாக செய்து முடித்தார்கள்....


ஆண்டுவிழா வந்தது....என் தங்கங்களின் நாடகத்தை அனைவரும் ரசித்துப் பார்த்தார்கள்....

அமைதியின் சிகரம் யோகினி அவளின் நீளமான கூந்தலை விரித்து விட்டு வெறிகொண்டு பேசியது இன்னும் கண்களிலேயே நிற்கிறது....

பாண்டிமாதேவியாக நடித்த என் செல்லக்குட்டி கீர்த்தி கடைசியாக அரசே..அரசே...என்று அரியணையில் சாய்ந்ததைப் பார்த்து மக்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்....


சிறப்பு விருந்தினரும் குழந்தைகள் நடித்த நாடகத்தைப் பாராட்டி பேசினார்....


நான் மெய்மறந்து என் மாணவச் செல்வங்களையே பார்த்தேன்... என் பிள்ளைகள் ஆயிற்றே.. என்று பெருமிதம் கொண்டேன்..


அட்டகாசம் தொடரும்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்