கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!
Jan 28, 2026,01:28 PM IST
- கவிசப்ரி தென்றல், தென்காசி
கண்களின் பார்வையில் காதல் கொண்டேனே....
உந்தன் பார்வையால்
எந்தன் இதயத்தை திருடி விட்டாய்...
உந்தன் பார்வையில்
வானுக்கும் மண்ணுக்குமான
ஈர்ப்பே தோற்று போனதே.....
உள்ளார்ந்த உணர்வுகளை
புரிந்து கொண்டேனே
உன் காந்த பார்வையால்....
இந்திரலோகமே சென்று விட்டேன்
உந்தன் கூர் பார்வையால்
என்னை ஆட்டிப் படைத்தாயே
உந்தன் ஆழ்மன பார்வையால்
என் மனதைக் கொள்ளைக் கொண்டாயே..
உந்தன் மழலைப் பார்வையால்....
உன் விழிகள் காண
என் விழிகள் வெட்கப்படுகிறதே
உந்தன் குறுகுறு பார்வையில்
உந்தன் பார்வை
மறக்க முடியா நினைவலைகள்...
எழுத முடியா வார்த்தைகள்....
வர்ணிக்க இயலாத் தொடர்கள்.....
என் உள்ளத்தைக் களவாடிச் சென்றாயே
கைது செய்யச் சொல்லி இதயம் துடிக்குதே
உந்தன் காதல் சிறையிலே!