தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

Jan 28, 2026,12:43 PM IST
- ச. அகல்யா

உன் பெயரை உச்சரிக்கும் போதே, 
உலர்ந்து போன நாவிற்குள் ஒரு துளி தேன்... 
உள்ளுக்குள் ஒரு மெல்லிய அமைதி! 
அதனிலும் பேரழகு... 
பெண்மையின் மென்மைக்கு உன் பெயரைச் சூட்டி, 
அவர்கள் நடக்கும் போதெல்லாம் 
நீயே வருவது போல் மனம் மயங்கி அழகு பார்ப்பது!

"தென்றலைக் கண்டு மாலையிட ஆசை" 
சின்னச் சின்ன ஆசையாய் அன்று கேட்டது... 
இன்று தீராத பெருமூச்சாய் ஆசையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது!





என்னையே நான் அறியாத மழலைப் பருவத்தில், 
என்னைத் தாலாட்டி வளர்த்த தாய் நீ! 
சுவாசத்தில் சுகந்திரத்தையும், 
சூழலில் ஆரோக்கியத்தையும் விதைத்த உன்னை, 
இன்று தேடி அலைகிறேன்... 
காணக் கிடைக்காத பொக்கிஷமாய் மறைந்து போனாய்!

உன் சொந்த வீடான இந்த மண்ணிற்குள், 
யாரோ அந்நியனைப் போல 
விருந்தாளியாய் வந்து தலைகாட்டிச் செல்கிறாயே... 
இது நியாயமா?

குளிர்ச்சியைக் கொடுக்க வேண்டிய நீ, 
சுவாசிக்கக் கூடத் தகுதியற்ற நச்சுக் காற்றாய் மாறிப் போனாய்! 
வெற்றுப் பெயரும், நாம் கலந்த விஷமும் மட்டுமே!

மீண்டும் வருவாயா?
என் ஜன்னல் கம்பிகள் வழியே அல்ல...
என் நுரையீரலின் ஆழம் வரை நிஜமான தென்றலாக!

(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!

news

25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?

news

இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளது...பட்ஜெட் தொடர் உரையில் ஜனாதிபதி பெருமிதம்

news

தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

news

இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!

news

சேலம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

news

அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்